உலகிலேயே பணக்கார நாடாக சீனா!

உலக நாடுகளில் பணக்கார நாடுகளின் பட்டியலில் அமெரிககாகவினை தாண்டி, சீனா முதலிடம் பிடித்துள்ளது. World’s Richest Country List-ல் முதல் இடத்தைப் பிடித்த China | Oneindia Tamil   உலகின் பணக்கார நாடுகள் குறித்து மெக்கின்சி (McKinsey & Co) நிறுவனம் நடத்திய ஆய்வில், இது தெரியவந்துள்ளது.

கடந்த இரு தசாப்தங்களில் உலகின் சொத்து மதிப்பானது மூன்று மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது. குறிப்பாக சீனா உலகின் முதல் பொருளாதார நாடாக இருந்த அமெரிக்காவினை தாண்டி முதல் இடத்தினை பிடித்துள்ளது.

மொத்த மதிப்பு எவ்வளவு? இந்த ஆய்வானது உலகின் 60% வருமானத்தை வைத்திருக்கும் நாடுகளின் இருப்பு நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் படி கடந்த 2000ம் ஆண்டில் 156 டிரில்லியன் டாலராக இருந்த மொத்த பொருளாதார நிகர மதிப்பானது, 2020ல் 514 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

இதில் சீனாவின் பங்கு தான் மிக அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சீனாவின் பங்கு? இன்னும் சரியாக சொல்லப்போனால் மொத்த வருவாயில் மூன்றில் ஒரு பங்கினை சீனா வைத்துள்ளது. சீனாவின் பொருளாதார மதிப்பு மட்டும் 120 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இது கடந்த 2000ம் ஆண்டில் வெறும் 7 டிரில்லியன் டாலராக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.   இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட அமெரிக்கா இந்த பணக்கார நாடுகள் பட்டியலில் இதுவரையில் முதலாவதாக இருந்து வந்த அமெரிக்கா, தற்போது இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் பொருளாதார நிகர மதிப்பு விகிதம் 50 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. ரியல் எஸ்டேட் சொத்துகள் அதிகம் உலகளவில் 68% சொத்துக்கள் ரியல் எஸ்டேட் சம்பந்தபட்டதாக உள்ளதாகவும், அதே போல உள்கட்டமைப்பு சார்ந்த சொத்துக்களின் மதிப்பும் 11% பங்கு வகித்துள்ளது. இதில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்

அமெரிக்கா மற்றும் சீனாவின் மொத்த செல்வத்தில், மூன்றில் இரு பங்கினை 10% பணக்கார குடும்பங்கள் வைத்துள்ளதை தான்.

மற்ற நாடுகளின் நிலவரம் இந்த பணக்கார நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் ஜெர்மனியும், அடுத்தடுத்த இடங்களில் பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மெக்ஸிகோ, ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளும் இடம் பெற்றுள்ளன.

Previous Story

சீனாவில் நட்சத்திர கண்ணீர்.!

Next Story

அக்குறணையில்  இரு வெடிப்பு!