ஹீரோவானார் ஹிஸ்புல்லாஹ்!

நஜீப்

Mystery shrouds Batticaloa's 'Shariah' campus | The Sunday ...

இன்று முஸ்லிம் சமூகத்தில் நம்பர் வன் அரசியல் செயல்பாட்டுக்காரர்-இராஜதந்திரி ஹிஸ்புல்லாஹ் என்று சொல்ல முடியும். தலைவர் ஹக்கீமுடன் முரண்பாடுகள் காரணமாக அவர் மு.கா. செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

அவரை சந்தித்த மு.கா.முக்கியஸதர்கள் சிலர், மீண்டும் தாய்க் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு கேட்டனர். தனக்கு கட்சியுடன் என்றுமே பகைமை கிடையாது. ஆனால் தலைமைத்துவத்துடன் சில முரண்பாடுகள் இருக்கின்றன என தன துபக்க நிலைப்பாட்டை சொல்லி இருக்கின்றார்.

Questions over billions of rupees in funding for Batticaloa ...

அந்த செய்தியை மு.கா. தலைவரிடம் எடுத்துச் சென்றவர்கள் தலைவருடன் பேசிய போது, ஹக்கீம் அதற்குப் பச்சைக் கொடி காட்டி ஹிஸ்புல்லாஹ்வை மு.கா. பிரதித் தலைவராக்கியும் இருக்கின்றார். ஆனால் இவர் விவகாரத்தில் ஹக்கீம் எந்தளவுக்கு திறந்த மனதுடன் காரியம் பார்ப்பார் என்று தெரியாது?

Batticaloa Campus | Kattankudy Sharia University ...

இந்தப் பின்னணயில் ஹிஸ்புல்லாஹ் மட்டக்களப்பு பூணாணியில் கட்டிய தனியார் பல்கலைகழத்தை அரசு விடுவித்து அவர் கையில் கொடுத்திருக்கின்றது. இதனை வென்றெடுப்பதில் அவர் இராஜதந்திரம் காரணமாக அமைந்தது.

இந்தப் பல்கலைக்கழகத்தின் தற்போதய பெறுமதி 1000 கோட்டிகள் வரை. இது ஒரு இனத்துக்கான பல்கலைக்கழகமல்ல. முழு நாட்டுக்குமானது. இதனால் காத்தான்குடியின் தவப் புதல்வன் இன்று முழு நாட்டுக்கும் ஹீராவாகி இருக்கின்றார்..

நன்றி: 01.10.2023 ஞாயிறு தினக்குரல்

 

Previous Story

மஹிந்தவை எச்சரித்த தயான்!

Next Story

மனித புதைகுழி, இந்து-பௌத்த பிரச்னையை விசாரித்த தமிழ் நீதிபதி எங்கே?