மஹிந்தவை எச்சரித்த தயான்!

-நஜீப்-

முன்னாள் வடக்குக் கிழக்கு மாகாணசபை அமைச்சராக செயலாற்றிய வரும் அரசியல் இராஜதந்திரியுமான தயான் ஜயதிலக்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஸாவைச் நேரடியாகச் சந்தித்து ஜனாதிபதித் தேர்தலின் கோட்டாவை வேட்பாளராக நிறுத்தினால் நாட்டில் மிகப் பெரும் நாசம் உண்டாகும் என்று எச்சரித்திருக்கின்றார்.

Ambassador Dayan Jayatilleka says Channel 4 documentary on Easter massacre raises 'reasonable doubt' about covert involvements – The Island

அத்துடன் உலகில் மிகப் பெரிய அட்டகாசங்களை பண்ணிக் கொண்டிருக்கும் ஒரு ஆபத்தான நாட்டின் உளவுத்துறையுடன் கோட்டா நெருக்கமான உறவுகளை பேணி வருகின்றார். இந்தத் தகவல்களை பலஸ்தீனத் தூதுவர் தனக்கு கூறியதுடன், தாங்களிடமும் இதனைத் தெரியப்படுத்தி இருகப்பதாக அவர் என்னிடம் சொன்னர் என்ற போது மஹிந்த அதனை ஏற்றுக் கொண்டார்.

Gotabaya's new journey to face mass unrest: Tough and bold decisions & ethno-religiosity - Dr. Dayan Jayatilleka • Sri Lanka Brief

இந்த விடயத்தை பெரிதாக பேச வேண்டாம். அத்துடன் தனக்கும் எச்சரிக்கையாக நடந்து கொள்ளுமாறும் அவர் ஆலோசனை வழங்கினார். அந்த நாடு எது என்று கேட்ட போது பெயரைச் சொல்ல முடியாது ஆனால் அந்த நாடு இந்தியாவோ சீனாவோ அமெரிக்கவோ பிரித்ததானியாவோ அல்ல என்று மட்டும் தயான் குறிப்பிட்டார்.

நன்றி: 01.10.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மொசாட்: கண்டம் தாண்டி ஹிட்லரின் ரகசிய  படை தலைவரை பிடித்தது எப்படி?

Next Story

ஹீரோவானார் ஹிஸ்புல்லாஹ்!