புடின் புரிவது புனிதப் போர்!

-யூசுப் என் யூனுஸ்-

நாம் சொல்லி இருந்தைப் போலவே 39 வயதான வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ரயில் ஏறி ரஸ்யா வந்தார். அங்கே அவர் கூறிய சில கருத்துக்கள், சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேற்குலக நாடுகள் இதற்குப் பொங்கி எழுந்துள்ளன.

கிம் ஜாங் உன் வட கொரியாவை விட்டு வெளியே வருவது அரிது. அதேபோல வட கொரியாவுக்கும் பெரும்பாலும் எந்தவொரு உலக தலைவர்களும் செல்ல மாட்டார்கள். இதனால் வடகொரியா எப்போதும் உலக நாடுகளில் இருந்து தனிமைப்பட்டே இருக்கும். அதுவும் கொரோனாவுக்கு பிறகு நிலைமை இன்னும் மோசமானது.  பசுமை நிற ரயில் அவர் ரஸ்யா வந்தார்.

🔴 Live: North Korea's Kim Jong Un inspects nuclear-capable bombers during Russia visit

குண்டு துழைக்காத இந்த ரயிலில் சுமார் 40 மணி நேரம் பயணித்து அவர் அங்கு வந்தார்.   ரஸ்யா அதிபர் புதினை நேரில் சைபீரியாவில் சந்தித்தார். சந்திப்பு சுமார் 4 மணி நேரம் நீட்டித்தது. ‘நாங்கள் எப்போதும் ரஸ்யாவுடன் இருப்போம்.

இப்போது தனது இறையாண்மையைப் பாதுகாக்க மேலாதிக்க சக்திகளுக்கு எதிரான புனிதப்  போரில் ரஸ்யா இன்று ஈடுபட்டுள்ளது. அதற்கும் எங்கள் ஆதரவு தொடரும்’ என்று அவர் தெரிவித்தார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையேயான ராணுவ ஒப்பந்தம் குறித்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நன்றி: 17.09.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பிரம்மபுத்திராவில்  சீனா மெகா அணை இந்தியா என்ன செய்யப் போகிறது?

Next Story

இந்திய எல்லையில் அணு ஆயுதங்களை குவிக்கும் பாகிஸ்தான்