வாரத்தில் நாலரை நாட்கள் மட்டுமே வேலை: UAE

வார வேலை நாட்களை 4.5 நாட்களாக மாற்றியுள்ள ஐக்கிய அரபு எமீரேட்ஸ், வார விடுமுறை நாட்களான வெள்ளி மற்றும் சனிக்கிழமையை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையாகவும் மாற்றி உள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், வரும் ஜனவரி முதல் வாரத்தில் 4.5 நாட்கள் வேலை என்பதை அனைத்து அரசு அலுவலகங்களும் அமல்படுத்துவது கட்டாயம் ஆகும். வேலை – வாழ்க்கை இடையே உள்ள இடைவெளி மற்றும் பொருளாதார போட்டி ஆகியவற்றை மேம்படுத்தவும் இந்த திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

உலகளவில் வார வேலை நாட்கள் 5 நாட்களாக இருக்கும் நிலையில், அதற்கும் குறைவாக வேலை நாட்கள் உள்ள வாரத்தை ஐக்கிய அரபு எமீரேட்ஸ் முதல்முறையாக அமல்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார். அதேபோல் அங்கு வார விடுமுறை நாட்களான வெள்ளி மற்றும் சனிக்கிழமையை சனி மற்றும் ஞாயிற்று கிழமையாகவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அங்கு, வார விடுமுறை வெள்ளி பிற்பகல் துவங்குகிறது. வளைகுடா நாடுகளில், ஐக்கிய அரபு எமீரேட்ஸ் தான், வார விடுமுறை நாட்களாக சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Previous Story

ஜெர்மன் புதிய சான்சலர் -ஓலாப் ஸ்கூல்ஸ்

Next Story

வலியில்லாமல் சாக இயந்திரம்