அக். பின் உள்ளாட்சி தேர்தல்!

-நஜீப்-

Local Council elections: Postal voting postponed - NewsWire

வருகின்ற 2023 அக்தோபர் மாதத்துக்குப் பின்னர் உள்ளாட்சித் தேர்தலுக்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. என ஜேவிபியினர் நம்புகின்றார்கள். தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த வழக்குகள் அக்தோபர் மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட இருக்கின்றன.

இந்த வழக்கில் தமக்கு சிறப்பான ஒரு தீர்ப்பு வரும் என்று மஹிந்த ஜயசிங்ஹ நம்புகின்றார். அந்த வழக்கில் தாம் வெற்றி பெற்றாலும் மீண்டும் நிதி நிலமை சரி இல்லை என்று சொல்லி இந்தத் தேர்தலைத் தள்ளிப்போடும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருக்கின்றது என்பதனையும் அவர் ஏற்றுக் கொள்கின்றார்.

அப்படி ஜனாதிபதி ரணில் தொடர்ந்தும் தேர்தலைத் தள்ளிப் போட்டாலும் தாம் ஆச்சர்யப்பட மாட்டோம் என்று மஹிந்த  ஜயசிங்ஹ குறிப்பிடுகின்றார்.  அதே நேரம் மொட்டுக் கட்சியினரும் தேர்தலை விரைவாக நடாத்மாறு கோரி தேர்தல் ஆணக்குழுவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

ஆளும் தரப்பினரே இப்படி நடந்து கொள்ளும் போது தேர்தல் பற்றிய நம்பிக்கைகள் மேலும் வலுவடைகின்றன. மறுபக்கத்தில் இது ஒரு நாடகமும் கூட!

நன்றி: 27.08.2023 ஞாயிறு தினக்குரல்

2

நிமல்-பிரேமலால் லடாய்!

-நஜீப்-

Dark horse Nimal Sripala de Silva to challenge Wickremesinghe for Premier's post - NewsIn.Asia

இலங்கை துறைமுக அதிகார சபையில் மிகப் பெரிய ஊழல் மோசடிகள் நடைபெற்று வருகின்றன என்று ஒரு பாரிய குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார் துறைமுகங்கள் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர்  பிரேமலால். இந்த அமைச்சில் தற்போது கெபினட் அந்தஸ்துள்ள அமைச்சராக இருப்பவர் நிமல் சிரிபால டி சில்வா.

அவருக்கும் இராஜாங்க அமைச்சருக்கும் இடையே இருக்கின்ற அதிகாரப் போட்டி அல்லது அதில் வரும் இலாபங்களை பங்கீடு செய்து கொள்வதில் இருக்கின்ற போட்டிதான் இதன் பின்னணி என்று தெரிகின்றது. ஆளும் மொட்டுக் கட்சியில் இருக்கின்ற அமைச்சர்களே இன்று ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றசாசாட்டுக்களை ஊடகள் முன்னிலையில் பகிரங்கமாக அறிவித்து வருகின்றார்கள்.

சிங்கப்பூர் போய் இருக்கும் ஜனாதிபதி ரணில் வந்து இது விடயத்தில் தீர்வு வழங்காவிட்டால் தான் இந்த ஊழல் மோசடிகள் பற்றிய விரிவான தகவல்களை ஊடகங்களிடம் பகிரங்கமாக எடுத்து சொல்ல இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் அறிவித்திருக்கின்றார். கொமிஷ; தொகைகளை சரியாக பங்கீடு செய்து கொண்டால் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்து விடவும் இடமிருக்கின்றது.

நன்றி: 27.08.2023 ஞாயிறு தினக்குரல்

3

அணுர பற்றிய கூற்றுக்கு வழக்கு!

-நஜீப்-

Anura Kumara Is Trying To Become A Billionaire In A Fortnight

இந்த நாட்களில் ஜேவிபி தலைவர் அணுரகுமாரவை இலக்கு வைத்து பாரிய அளவில் சதி நடவடிக்கைகளும் போலியான கதைகளும் கட்டவிழத்து விடப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னர்ஜோன்ஸ்டன் பெர்ணாந்து மலிக் சமரவிக்கிரமாவிடமிருந்து கோடிக் கணக்கான பாணத்தை அணுரா பெற்றுக் கொண்டார் என்றும் அதே போன்று அயர்லாந்தில் அவருக்கு கோடிக் கணக்கு பெறுமதியான  வீடு இருப்பதாகவும் ஒரு கதை சொல்லப்பட்டது.

அதுவும் போலியான கதை என்று தெரிய வந்தது. இப்படியான போலி செய்திகளை பிரசுரித்ததால் திவயின பத்திரிகை நிறுவனம் ஒரு முறை அணுரகுமாரவிடம் பகிரங்கமாக மன்னிப்பும் கோட்டிருந்தது. மற்றுமொரு முறை திலித் ஜயவீர தன்தை விட மிகப் பெரிய ஒரு வியாபாரிதான் அணுரகுமார. தான் வங்கிகளிடம் 800 கோடி வரை கடன் பெற்றிருக்கின்றேன், ஆனால் அணுரகுமார அதனைவிடப் பெரும் தொகையான பணத்தை வங்கியில் போட்டு வட்டி பெற்று வருகின்றார் என்று சொல்லி இருந்தார்.

இப்படிப்பட்ட போலிப் பிரச்சாரங்களுக்காக அணுரகுமார திசாநாயக்க நீதிமன்றில் பல வழக்குகளைத் தாக்கல் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட ஒரு கதையை குமார் குனரத்னம்-துமிந்த நாகமுவ தரப்பும் அண்மையில் செய்திருந்தனர். அந்தக் கதைக்கு குட்டியாரச்சி மற்றும் சாகரவுக்கு 10மில்லியன் நஸ்டஈடு கேட்டு அணுர தரப்பினர் தமது சட்டத்தரணிகள் ஊடாக கடிதம் அனுப்பி இருக்கின்றார்கள்.

நன்றி: 27.08.2023 ஞாயிறு தினக்குரல்

4

மனிப்பூர் பாணியில் மோதல்!

-நஜீப்-

Eastern Province, Sri Lanka - Wikipedia

தமது அரசியல் இருப்பை தொடர்ந்து முன்னெடுக்க ஆட்சியாளர்கள் இந்த முறையும் இன மோதல்களை ஏற்படுத்த முனையக் கூடும். அப்படிப்பட்ட பல சம்பவங்கள் இந்த முறை கிழக்கை மையமாக வைத்து முன்னெடுக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன என்று முன்னாள்  ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கொழும்பு மாநகர சபை பிரதம வேட்பாளராக போட்டியிட இருக்கும் முஜீபூர் ரஹ்மான் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார்.

வேனோடு போட்டு உங்களைக் கொழுத்திப் போடுவோம் என்று சில தினங்களுக்கு முன்னர் பௌத்த தேரர்கள் தமிழர்களை எச்சரித்திருந்ததும். அதே போன்று கிழக்கில் பெருவாரியாக இருக்கின்ற தமிழ் முஸ்லிம் மக்களை வம்பில் மாட்டிவிடவும் அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. எனவே மக்கள் விளிப்புடனும் அவதானித்துடனும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் முஜீபூர் ரஹ்மான் சமூகங்களை எச்சரித்திருக்கின்றார்.

இந்த முயற்சியில் ஜனாதிபதி ரணிலும் ராஜபக்ஸாக்களும் இணைந்து மேற்கொள்ளக் கூடும் என்றும் அவர் எச்சரித்திருக்கின்றார். அணுரகுமரவும் இதற்கு சமாந்திர குற்றச்சாட்டை முன்வைக்கின்றார். நாட்டில் இனமோலொன்றுக்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன என்றும் இந்திய புலனாய்வுத்துறையினர் எச்சரித்திருக்கின்றார்கள்.

நன்றி: 27.08.2023 ஞாயிறு தினக்குரல்

5.

திலித் வந்தால் ரணில் ஓரம்!

-நஜீப்-

Dilith Jayaweera Shame On You - Colombo Telegraph

2024ல் நடக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பான பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நமக்குத் தெரிந்த கணக்குப்படி இப்படி ஜனாதிபதி ஆசை வைத்திருக்கின்ற பலர் இந்தத் தேர்தலில் களநிலவரத்தை புரிந்து கொண்டு இடையில் ஒதுங்கிக் கொள்ள அதிக வாய்புக்கள் இருக்கின்றன.

தமக்கு பிரதான அணியில் இடம்கிடைக்கும், அல்லது தமது அணியின் செல்வாக்கைக் காட்சிப்படுத்தி பொதுத் தேர்தலில் கூட்டணிகளை அமைக்கின்ற போது தமது தரப்புக்கு பிரதான அணியின் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுக் கொள்ளும் ஒரு உத்தியாகவும் ஜனாதிபதித் தேர்தல் பற்றிய பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றார்கள் என்றும் எடுத்துக் கொள்ள முடியும். தற்போது இந்த வேட்பாளர் பரப்புரையை முடக்கி விட்டிருப்பவர்களில் திலித் ஜயவீர முக்கியமானவர்.

அவர் தனது சகாக்களிடம் தான் வேட்பளராக வந்தால் தற்போத ஜனாதிபதி ரணில் கூட ஒதுங்கிக் கொள்ள இடமிருக்கின்றது. அத்துடன் பெரும் எண்ணிக்கையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னுடன் வந்து இணைந்து கொள்ளவும் தயாராக இருப்பதாகவும் அவர்களில் ஆளும் எதிரணி உறுப்பினர்களும் இருப்பதாவும் கூறி வருகின்றார். திலித் வருகை பற்றி ரணிலைக் கோட்டால் எங்கே தேர்தல் என்று அவர் கேட்டிருக்கின்றார்.

நன்றி: 27.08.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ஜனாதிபதி வேட்பாளர் தேடுகின்ற கட்சிகள்!

Next Story

ஜோகன்னஸ்பர்க் நகரில் பயங்கர தீ விபத்து - 73 பேர் உயிரிழப்பு