ரணிலின் பிரதமர் சாமல்!

-நஜீப்-

வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் கடும் போட்டி நிலை ஒன்று ஏற்பட்டிருப்பது பற்றி பல்வேறு மட்டங்களில் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. அந்தத் தேர்தலில் ரணிலை ஜனாதிபதி வேட்பாளராகவும் மொட்டுக் கட்சி உறுப்பினர் சாமல் ராஜபக்ஸாவை பிரதமர் வேட்பாளராக கொண்டு வந்தால் அதிக வாய்ப்பு கிடைக்கும் என்று ஜனாதிபதி ரணிலுக்கு அவரது முக்கியஸ்தர்கள் ஆலோசனை தெரிவித்து வருகின்றார்கள்.

அப்போது மொட்டுக் கட்சி ஆதரவையும் தமக்குப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அவர்கள் எதிர்பார்க்கின்றார்கள். அதே நேரம் சஜித்தை பிரதமர் வேட்பாளராக்கி அந்த இடத்திற்கு எதிரணி பொது வேட்பாளராக டலஸ் அலகப்பெருமாவைக் கொண்டு வரும் ஒரு முயறச்சியும் இருக்கின்றது என்றும் பேசப்பட்டு வருகின்றது.

Image by Harini Amarasuriya

ஆனால் ஏற்கெனவே  சஜித் தன்னை ஐக்கிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளராக நியமனம் செய்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. அதே போன்று ஜேவிபி சார்பில் அணுராவுக்குப் பதில் அருணி அமரசிங்ஹவை நியமிப்பது பற்றி ஒரு கதையும் சொல்லப்படுகின்றது. அருணி பற்றிய கதை அணுரகுமார வரவில் இருக்கின்ற அச்சத்தின் வெளிப்பாடு என்றும் ஒரு செய்தி.

நன்றி: 23.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பாக்.காதலனை கரம் பிடிக்கச் சென்ற இந்திய பெண்ணுக்கு அமோக வரவேற்பு

Next Story

28 கோடி ஆணிக் களவு!