சாம்பலாகிறது ரஜிவ்-ஜே.ஆர் உடன்பாடுகள்!

-நஜீப் பின் கபூர்-

PM Modi raises aspirations of Tamils with Sri Lankan President Ranil Wickremesinghe - The Hindu

மொழி என்று இன்று உலகில் பல்லாயிரக் கணக்கில் வழக்கில் இருக்கின்றன. இந்தியாவில் மட்டும் 2400 மொழிகள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. அதே போன்று இந்தோனேசியாவில் 700 வரையிலான மொழிகள் உபயோகத்தில் இருக்கின்றன என்று கூறுகின்றது ஒரு தகவல். நமது நாட்டில் சிங்களம் தழிழ் ஆங்கிலம் பிரதான மொழிகள் என இருந்தாலும், இங்கும் டசன் கணக்கான மொழிகளை உபயோகிக்கின்ற மக்கள் சிறு குழுக்களாக வாழ்ந்து வருகின்றார்கள். மலே, வேடுவ, மலையாலம் என்பன அவற்றில் சில. ஆனால் அப்படி தமக்கெனவே இருக்கின்ற தனித்துவமான மொழிகளில் ஏதாவது சொன்னால் அது அந்த மொழியைப் பாவிக்கின்ற சிலருக்கே புரியாமல் இருக்கின்றன.

Sri Lankan President Ranil Wickremesinghe will visit India tomorrow on a 2-day official visit

சில சமையங்களில் தமிழ் மொழியில் உச்சரிக்கப்படுகின்ற சில வார்த்தைகளை அந்த மொழியைப் பேசுகின்றவர்களே அறியமல் புரியாமல் தெரிந்தவர்களிடத்தில் அதற்கு விளக்கம் கோட்கின்ற சந்தர்ப்பங்களும் கற்றவர்களுக்கும் கூட ஏற்படுகின்றன. அப்படிப்பட்ட ஒன்றாகத்தான் நமது அரசியலில் இந்தப் பதின்மூன்றும் இருக்கின்றது. அது உண்டு இல்லை என்ற நிலையில்தான் கடந்த 18ம் திகதி தமிழ் தரப்பினரைச் ஜனாதிபதி சந்திக்கும் வரை நிலமை இருந்து வந்தது. இந்தியப் பிரதமரும் இலங்கை ஜனாதிபதியும் செய்து கொண்ட எழுத்து மூல உடன்படிக்கையின் பிரகாரம். பதின் மூன்று என்ற ஒரு அரசியல் திருத்தம் நமது யாப்பில் இருக்கின்றது. ஆனால் இன்று நடைமுறையில் அப்படி ஒன்று இல்லை.

கடந்த செவ்வாய் கிழமை தமிழ் தரப்பினரை அவசர அவசரமாக கொழும்புக்கு அழைத்த ஜனாதிபதி ரணில் அவர்களிடம் கூறிய விடயங்களில் இருந்து ஒன்று தொளிவாகத் தெரிந்தது. ஜனாதிபதி இந்திய பயணம் தொடர்ப்பில் நடந்து கொண்டிருக்கின்ற நாடகங்கள் தொடர்பாக நாம் கடந்த வாரம் தெளிவாக சொல்லி இருந்தோம். நாம் இந்தக் கட்டுரையைத் தாயாரிக்கின்ற நேரம் அவர் இந்தியாவில் இருக்கின்றார். தமிழர்களின் இனப்பிரச்சினை விவகாரங்களில் எந்த எதிர்பார்ப்புக்களையும் வைத்து ஏமாற வேண்டாம் என்று நாம் அதில் சொல்லி இருந்தோம். இந்தியாவுக்குப் போகும் முன்னரே ஜனாதிபதி ரணில் தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக சொல்லி விட்டார்.

நாம் கடந்த வாரம் சொன்னதை அவர்  இரு தினங்கள் தள்ளி அதனை உறுதி செய்திருக்கின்றார். சுமந்திரன் அங்கு 13 பிளஸை மஹிந்த அமுல்படுத்துவதாக சொன்னர் ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. எங்களை ஏமாற்றிவிட்டார் என்று சுட்டிக்காட்டிய போது குறுக்கிட்ட ஜனாதிபதி நான் மஹிந்த ராஜபக்ஜ அல்ல, ரணில் விக்கிரமசிங்ஹ என்று அங்கு குறிப்பிட்டார். அந்த வார்த்தைப்படி நீங்கள் என்னை நம்பலாம், என்று தமிழ் தரப்பினர் எடுத்துக் கொண்டிருப்பார்கள். அத்தோடு தான் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு மிகச் சிறந்த திட்டத்தை முன் வைத்திருப்பதாகவும் அதனை முன்னெடுப்பதா இல்லையா என்று தமிழ் தலைவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும் என்று பந்தை அந்தப் பக்கம் தள்ளி இருக்கின்றார் ஜனாதிபதி ரணில். இந்தியத் தலைவர்களிடமும் அவர் இதனைத்தான்  சொல்லித் தப்பிக் கொள்ள முனைவார்.

President departs on official visit to India

இப்போது தமிழ் தலைவர்களிடம்

நாம் கேட்க்கின்ற கேள்வி

ஜனாதிபதி சொல்கின்ற தீர்வு

என்ன என்பது உங்களுக்குப் புரிகின்றதா?

அதனை நீங்கள் ஏற்றுக் கொள்கின்றீர்களா?

அப்படி ஒன்று ஏதாவது இருக்கின்றதா?

என்று நாம் கேட்க்கின்றோம்.

அது பற்றி ஈழத் தழிழர் தரப்பின் நிலைப்பாடு,

புதத்திஜீவிகள் என்ன சொல்கின்றார்கள்?

Sri Lanka: 1st Tamil politician named opposition leader since 1983 | World News - Hindustan Times

 

அனைத்துக் கட்சிகளும் அங்கிகரித்தால்-அவர்கள் முழுமையாக இணங்கினால் மட்டுமே பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியும்   என்று ரணில் தெளிவாக ஆங்கில மொழியில் அங்கு தமிழ் தலைவர்களுக்கு-சம்பந்தருக்கு முகத்திற்கே சொல்லி விட்டார். எனவே நாம் தொடர்ந்து சொல்லி வருவதைப்போன்று இப்போது 13 வது திருத்தம் என்று ஒன்று இல்லை. அது ஏட்டுக் சுரக்காய் நிலையில்தான் இருக்கின்றது. எனவே மொழிகளில் உள்ள புரிதலின் படி தமிழ் தலைவர்கள்-தமிழ் மக்கள் இது பற்றி என்ன நினைக்கின்றார்கள். இதன் பின்னரும் அவர்கள் இதில் நம்பிக்கை வைக்கலாமா? அவர்கள் கடந்த காலங்களில் இதனை தொடர்ந்தும் சொல்லித்தான் வந்தார்கள். ஆனால் தமிழ் தலைவர்கள் மொழி புரியாதது போல நாடகம் ஆடிக் கொண்டு வந்தார்கள். இன்று கதைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டார் ரணில்.

நமது கணக்குப்படி இந்திய-இலங்கை அல்லது ரஜீவ்-ஜே.ஆர். உடன்படிக்கை செல்லுபடியற்றதாகி விட்டது என்று கொழும்புக்கு அவர்களை அழைத்து ஜனாதிபதி ரணில் முகத்திற்கே கூறி விட்டார் என்பதுதான் அதன் கருத்து. எனவேதான் 13 குளோஸ் அல்லது சாம்பல் என்ற செய்தியை பகிரங்கமாக சொல்லியதற்காக அவரைப் பாராட்டலாம். பேரினச் சமூகத்தின் பிடியில் அவர் எப்படிச் சிக்கி இருக்கின்றார் என்பதற்கு இது நல்ல உதாரணம். அவரது இந்த நிலைப்பாடு கடும் போக்கு மொட்டுக் கட்சியினருக்கு நல்ல உற்சாகத்தைக் கொடுத்திருக்கும் என்று நாம் நம்புகின்றோம். அவரது இந்த நிலைப்பாட்டை பிரசன்ன ரணதுங்ஹ கடந்த வராம் பேசிய வார்த்தையிலிருந்து இதனை நாம் சுட்டிக்காட்டி இருந்தோம்.

Sri Lankan Tamil leaders congratulate Stalin - Counterpoint

13வது திருத்தத்திற்கு இவர்கள் ஆப்பு வைக்கின்றார்கள். அதன் பின்னரும் தமிழ் தலைவர்கள் எதற்காக ரணில் அழைக்கின்ற போதுதெல்லாம் அங்கு ஓடிப் போய் ஏமாந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் தமிழ் தரப்பினருக்க மக்களுக்கு உரிமைகளைத் தரவோ இனப் பிரச்சினைக்குத் தீர்வு தரவோ தயாராக இல்லை என்று மறைமுகமாக சொல்லி, இன்று பகிரங்கமாக அதனை அறிவித்தும் இருக்கின்றார்கள். எனவேதான் அவர்கள் சொல்ல வருகின்ற செய்திகளை புரியாத மொழிகளைப் போல் இந்தத் தலைவர்கள் இருந்து காலத்தைக் கடத்தி வந்திருக்கின்றார்கள். ஆட்சியாளர்களும் தமிழ் தலைவர்களும் இது வரை கபட நாடகமொன்றைத்தான் அரங்கேற்றிக் கொண்டிருந்திருக்கின்றார்கள் என்பது தமிழ் மக்களுக்கு இப்போது நன்றாகப் புரிந்திருக்க வேண்டும்.

Indian MEA issues statement on SL President's visit – Sri Lanka Mirror – Right to Know. Power to Change

ஜனாதிபதி ரணில் உச்சரித்திருக்கும் வார்த்தைப் பிரயோகங்களுக்கு தமிழ் தலைவர்கள் சமூகத்துக்குத் தரப்போகும் விளக்கம் என்ன என்று நாம் கேட்க்கின்றோம். அடுத்து ரணிலின் இந்த தெளிவான வார்த்தைகளுக்குப் பின்னரும் இப்போது தமிழ் தலைமைகள் ஆளுக்கொரு விளக்கத்தைச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். இன்னும் சிலர் இந்தியப் பிரதமருக்கு நாள்தோரும் இப்போது ஆளுக்கொரு கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கின்றார்கள்.

ரணில் 13வது திருத்தத்தை அமுல்படுத்த முடியாது என்று சொன்ன பின்னர் அதற்கு இந்திய ஏதாவது கடுமையான பதில்களைத் தரக்கூடும் என்று நாமும் எதிர்பார்த்தோம். ஆனால் அது அப்படி அமையவில்லை. எனவே நாம் வழக்கமாகச் சொல்வது போல இருதரப்பு நாடகம் என்றுதான் இதனைப் பார்க்க வேண்டும். இந்தியாவின் முன்னணி பத்திரிகையான த ஹிந்து ஜனாதிபதியின் இந்திய விஜயம் தொடர்பாகவும் இருதரப்பு நலன்கள் சார்த்த விடயங்கள் பற்றியும் அதில் எழுதி இருந்தது.

Prime Minister's tour of India and New Zealand | Page 7 | Daily News

சாணக்கியன் எம்.பி. தான் தருவதை ஏற்றுக் கொள்ளுங்கள் 13 தர முடியாது என்று ஜனாதிபதி ரணில் பகிரங்கமாகச் சொன்னதை வன்மையாகக் கண்டித்திருக்கின்றார். நாங்கள் உங்களிடம் பிச்சை கேட்க வரவில்லை எங்களது உரிமைகளைக் கேட்கத்தான் வந்திருக்கின்றோம் என்று குறிப்பிட்டிருக்கின்றார். இது விடயத்தில் இந்திய இராஜதந்திரிகள் இலங்கை ஜனாதிபதி ரணில் 13வது திருத்தம் தொடர்ப்பில் சொன்ன கருத்துக்கு ஏன் இன்னும் மௌனம் சாதிக்கின்றார்கள். அல்லது அவர்களும் ரணிலின் கருத்துக்களை ஏற்றுக் கொள்க்கின்றார்களா என்று தெரியவில்லை.

இலங்கை ஜனாதிபதி 13வது திருத்தத்தை அமுல்படுத்த முடியாது என்று சொன்ன கதைகள் பற்றியோ அல்லது தமிழருக்கு அரசியல் அதிகாரங்கள் வழங்குவது பற்றியே ஒரு வார்த்தைகள் கூட அங்கு பத்திரிகை பேசவில்லை. எனவே இலங்கை இந்திய உடன்படிக்கையை அமுல் படுத்த முடியாது என்ற கருத்தை அவர்களும் ஏற்றுக் கொள்கின்றார்கள் என்றுதான் இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவும் தமிழர்களுக்கு அதிகாரங்களை வழங்குவதில் விருப்புடன் இல்லை. அத்தோடு ஈழத் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் நெருக்கமான ஒரு உறவு வளர்வது பற்றியும் இந்திய இலங்கை அரசியல்வாதிகளிடம் நல்லெண்ணம் இல்லை. அதனால்தான் ரணில் இந்திய இலங்கை உடன்படிக்கை தொடர்பில் கண்ணத்தில் அரைந்தது போல ஒரு கதை சொல்லி இருக்கின்ற போது இது வரை இந்தியாவின் கருத்துக்களை இது விவகாராத்தில் கண்டு கொள்ள முடியாதிருக்கின்றது என்று நாம் கருதுகின்றோம்.

Will impart new momentum, says India as Prez Ranil Wickremesinghe lands in Delhi | Latest News India - Hindustan Times

ஜனாதிபதி ரணில் எல்லாக் கட்சிகளும் ஏற்றுக் கொண்டால் மட்டுமே தனக்கு 13 னைத் தரமுடியும் என்று கூறி இருப்பது அவர்கள் எல்லோரும் ஒருபோதும் இதற்கு ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்பதனைத் தெரிந்துதான் அவர் அப்படிக் கூறி இருக்கின்றார் என்பதும் தெரிந்ததே.  இந்தியாவின் உணர்வுகளை இது விடயத்தில் அங்கு இருக்கின்கின்ற இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட ஊடாக  புரிந்து கொண்டுதான் ஜனாதிபதி ரணில் இப்படி துணிச்சலுடன் இதனைத் தமிழ் தரப்பினருக்கு முகத்திற்கே சொல்லி இருக்க வேண்டும். அத்துடன் இந்த மிலிந்த மொரகொட என்பவர் அமெரிக்காவுடனும் மிகவும் நெருக்கமான உறவில் இருந்து வருபவர் என்பதும் தெரிந்ததே.

ஜனாதிபதி ரணில் தமிழ் தரபினருக்கு அதிகாரங்களைக் கொடுக்க இருப்பது போல காய் நகர்த்தித்தான் பெருந் தொகையான பணத்தை நெருக்கடியான நேரத்தில் இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொண்டார். அந்தத் தொகை நன்கு பில்லியன் வரையிலான மிகப் பெரிய கடன் உதவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அன்று கடும் போக்கு சரத் வீரசேக்கர போன்றவர்கள் ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு முரணாக பொது அரங்குகளில் பேசி வந்தபோது அதற்கு எதிராக ஜனாதபதி ரணில் வாய்திறக்கவே இல்லை. இப்போது அவரே சரத்வீரசேக்கர பாணியில் 13 விவகாரத்தில் பேசி இருக்கின்றார். இலங்கை அரசியல்வாதிகள் நடத்தைகளை இந்தியாவுக்குப் புரியாமல் இல்லை. அவர்களும் இங்கு நடப்பதை நன்கு தெரிந்துதான் வைத்திருக்கின்றார்கள். அவர்கள்  இணக்கப்பாடுகள்- ஒப்புதல்கள் இல்லாம் இலங்கை அதிகார வர்க்கம் இப்படி துணிவுடன் 13க்கு எதிராக பேசி இருக்க முடியாது என்பது எமது வலுவான கருத்து.

Backtracking on accountability measures will harm all Sri Lankans: Tamil leader - Opinion | Daily Mirror

நாம் கடந்த வாரம் மஹிந்தானந்த அலுத்கமகே ஜனாதிபதியைச் சந்தித்த போது இந்த அதிகாரப் பகிர்வு விவகாரத்தை அவரிடம் கேட்ட போது நான் அதனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கின்றேன். நீங்கள் அது பற்றி எப்படி வேண்டுமானாலும் முடிவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதனை சட்டமாக்குவதும் குப்பையில் எடுத்து எறிவதும் உங்கள் கைகளில்தான் இருக்கின்றது என்று அவரிடம் கடந்த வாரம் சொல்லி இருந்ததை நாமும் குறிப்பிட்டிருந்தோம். இப்போது இந்தியாவில் இருக்கின்ற ஜனாதிபதிக்கு அவர்கள் இதற்கு என்ன பதிலைக் கொடுக்கப் போகின்றார்கள்.? தட்டிக் கொடுக்கப் போகின்றார்களா? தட்டி வைக்கப் போகின்றர்களா என்பது இந்த கட்டுரை பிரசுரமாகும் போது தெரிய வந்திருக்கும்.

தமிழ் தலைவர்கள் ரணிலிடம் தீர்வை எதிர்பார்ப்பது முட்டல்தனமானது என அவர்களே இப்போது பேசி வருகின்றார்கள். ஜேவிபி. தலைவர் அணுரகுமாரவும் சில தினங்களுக்கு முன்னர் இதனைக் கூறி இருக்கின்றார். ஆனால் நாம் ரணில் அதிகாரக் கதிரையில் அமர்ந்த நாளிலிருந்தே இந்தக் கதையைக் கடந்த ஒரு வருடங்களாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றோம். அதுவும் கடும் வார்த்தைகளில் பேசி வந்திருக்கின்றோம். இப்போது சுகமா என்றுதான் அவர்களைக் கேட்க வேண்டி இருக்கின்றது.

Previous Story

மணிப்பூர் வன்முறை:  தொடங்கியது எப்படி? யார் காரணம்?

Next Story

பீரிக்ஸ் மாநாட்டில் புடின் இல்லை.!