பாரதூரமான குற்றச்சாடுக்கள்!

-நஜீப்-

ஊழல் மோசடிக்கு எதிரான ஆணைக் குழுவில் இந்த நாட்களில் மிகப் பெரிய சதிகள் நடந்து வருகின்றது என்ற குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றார் நாமல் ராஜபக்ஸ என்ற சட்டத்தரணி. இவர் ஒரு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டவரும் கூட, அவர் பகிரங்கமாக ஊடகம் ஒன்றில் கலந்து கொண்டு இந்தத் தகவல்களை வெளியிட்டார்.

இந்த நாட்டில் மிகப் பெரிய ஊழல்கள் இன்று இங்குதான் நடந்து கொண்டிருக்கின்றது என்றும் அவர் சாடுகின்றார். இந்த நாட்களில் ராஜபக்ஸாக்களுக்கு எதிரான கோவைகளை மூடுவதற்கும் அவற்றைக் காணாமல் செய்வதற்குமான வேலைகள் நடக்கின்றன. ஆணைக்குழுவில் இன்று பணியாற்றும் பெரும்பாலானவர்கள் ராஜபக்ஸ விசுவாசிகள்.

Analysis: Will Ethiopia's latest crackdown on corruption reverse the “red carpet” into “red line”? - Addis Standard

அவர்கள் பசில் ராஜபக்ஸ, ரோஹித்த அபேகுனவர்தன, ஹெல்பின் ஹம்பாந்தோட்டை, மேஹன் பீரிஸ், கோட்டாபே ராஜபக்ஸ போன்றவர்கள் தொடர்பிலான கோவைகள் முறைகேடாக மூடிவிட்டனர்.  இன்னும் பலவற்றை மூட வேண்டிய தேவை அவர்களுக்கு இருக்கின்றது.

The Fight Against Corruption - Fraud

எனவேதான் ஊழலுக்கு எதிராக புதிதாக விஜேதாசவே  கொண்டு வந்த சட்டமூலமும் தற்போது திட்டமிட்டுக் காலதாமதம் செய்யப்பட்டு வருவதாகவும் சட்டத்தரணி நாமல் பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றார்கள். தாமதம் பற்றி தனக்கும் புரியவில்லை என நீதி அமைச்சர் விஜேதாசவே அங்கலாய்க்கின்றார்.

நன்றி: 16.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ஜெலன்ஸிக்கு பெரும் ஏமாற்றம்!

Next Story

நெல்சன் மண்டேலா காதலை ஏற்க மறுத்த இந்தியப் பெண்