சு.கட்சிக்குள் பெரும் கிளர்ச்சி!

-நஜீப்-

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்றால் பண்டாரநாயக்க என்று பேசாமல் அதற்கு வரலாறு இல்லை. கட்சி துவங்கிய காலத்தில் இருந்து அந்தக் குடும்பம்தான் அங்கு ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கின்றது. தற்போது மைத்திரி சு.கட்சிக்குத் தலைவர். செல்வாக்குடன் இருந்த அந்தக் கட்சி இன்று பட்டுப் போய் இருக்கின்றது.

இதற்கு மைத்திரி அனுகுமுறையும் முக்கியே காரணம் என விமர்சனங்கள். எனவே மீண்டும் கட்சியை பழையபடி கட்டியெழுப்புவதாக இருந்தால் மைத்திரியை அந்தத் தலைமைப் பதவியில் வைத்துக் கொண்டு எதனையும் சாதிக்க முடியாது.

எனவே மீண்டும் சந்திரிக்காவை எப்படியாவது தலைமைப் பதவிக்குக் கொண்டுவர வேண்டும் என முக்கியஸ்தர்கள் பலர் தற்போது இரகசிய சந்திப்புக்களை நடாத்திக் கொண்டு வருகின்றார்கள். தனக்கு எதிராக கட்சியில் சதி நடப்பதும் அதில் கட்சியில் உயர் பதவியில் இருக்கின்ற பலரும் இருப்பதை மைத்திரி அறிந்தான் வைத்திருக்கின்றார்.

நாம் இந்த குறிப்பை தயாரிக்கும் போது தனக்கெதிரான இந்தச் சதியை முறியடிப்பது பற்றிய தீர்க்கமான ஒரு சந்திபிபல் மைத்திரி இருக்கின்றார் என்று நமக்கு தகவல்கள் வருகின்றன. கிளர்ச்சிக்காரர்களா மைத்திரியா கில்லாடிகள் பொருத்துப் பார்ப்போம்!

நன்றி: 16.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

குற்றச்சாட்டுக்கு ஈரானின் பதில்!

Next Story

இந்தோனீசியா பழிவாங்கும் ஆபாசப்பட வழக்கு: வரலாற்று தீர்ப்பு