மேற்குக் கரையில் கொடூரம்!

-யூசுப் என் யூனுஸ்-

பாலஸ்தீன் மேற்குக் கரை காசாவில் கடந்த இருபது வருடங்களில் இல்லாத அளவுக்கு ஒரு தாக்குதலை இஸ்ரேல் நடாத்தி இருக்கின்றது. அங்கு பயங்கரவாதிகள் தமது மக்களுக்கு எதிராக மிகப் பெரிய ஒரு தாக்குதலை நடாத்தத் தயாராகிக் கொண்டு வருகின்றார்கள்.

9 Palestinians Killed in Israel’s Biggest Military Strike on Jenin Refugee Camp in 20 Years

எனவே வேறு வழியின்றி தாம் இந்தத் தாக்குதல்களை நடாத்த வேண்டி வந்தது என்று இஸ்ரேல் அமெரிக்காவுக்கு விளக்கம் கொடுத்திருக்கின்றது. தனக்கு எதிராக பிராந்தியத்திலுள்ள பயங்கரவாத இயக்கங்கள் இலட்சக் கணக்கான ஏவுகணைகளைத் தாக்குதலுக்குத் தயாராக வைத்திருக்கின்றன.

Israel-Palestinian conflict: Fears of wider flare-up after deadly Jenin raid - BBC News

இதனால் மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றார்கள் என்று இஸ்ரேல் கருதுகின்றது. ஈரானின் நவீன ஆயுத கண்டு பிடிப்பும் பிராந்தியத்தில் அதன் பலமும் இஸ்ரேலுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் இதுவரை எதிரிகளாக இருந்த அரபு நாடுகள் ஈரானுடன் நெருக்க உறவில் இருப்பதும் பிராந்தியத்தில் இஸ்ரேலின் இருப்புக்குப் பெரும் அச்சுறுத்தல் என்பதும் உண்மைதான்.

எனவே தன்னை அவர்கள் தாக்கும் முன் அவர்களின் முதுகெழும்பை முறிக்கவே இஸ்ரோல் மேற்குக் கரை ஜெனீம் மீது இந்தக் கெடிய தாக்குதலை நடாத்தி பலபேரைக் கொன்றும் காயப்படுத்தியும் இருக்கின்றது.

நன்றி: 09.07.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ராஜபக்ச குடும்பம்: ஆட்சியில் இருந்து நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவு!

Next Story

ஐதேக.அமைப்பாளராக ரிசான் ஹலிம்தீன் நியமனம்