சந்தையில் உறுப்பினர் விற்பனை!

-நஜீப்-

நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொள்ள உறுப்பினர் சந்தைப் பொருட்களை விற்பனை செய்வதுபோல் விற்கப்படுவது இலங்கை அரசியலில் நெடுங்காலமாக நடந்து வருவது தனக்கு தெளிவாகத் தெரியும் என்று களுத்துறை நாடாளுமன்ற உறுப்பினர் குமார் வெல்கம அண்மையில் பகிரங்கமாக குறிப்பிட்டிருந்தார்.

ஊழல் மோசடி தொடர்பான சட்ட மூலம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த போதுதான் அவர் இந்தக் கருத்தை தெரிவித்தார். அத்துடன் ஊழல் மோசடிக்கு எதிராக சட்டத்தை அமுல் படுத்தவதாக இருந்தால் முதலில் நாடாளுமன்றத்தில் இருந்துதான் அதனை ஆரம்பிக்க வேண்டும்.

தனக்கு நாடாளுமன்றத்தில் பொரும்பான்மை தேவைப்படுகின்ற போது உறுப்பினர்கள் ஐந்து ஆறு (5-6) கோடி ரூபாய்க்கு விலைப்படுவது ஒன்றும்  புதிய விடயம் அல்ல என்றும் அவர் அந்த சந்திப்பில் வெளிப்படுத்தினார். சிறுபான்மை உறுப்பினர்கள் தாம் சமூக நன்மைக்குத்தான் அவ்வப்போது பல்டியடிக்கின்றோம் என்று தாம் சார்ந்த சமூகங்களுக்கு கதை விடுவதும் தெரிந்ததே. எனவே இந்த அரசாங்கத்தில் இருக்கின்ற உறுப்பினர்கள்.

ஆட்சியாளர்கள் என்னதான் மக்கள் விரோத தீர்மானங்களை எடுத்தாலும் காசுக்காக உறுப்பினர்கள் தம்மை விபச்சாரிகள் போல விற்று பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால் அரசக்குப் பெரும்பான்மை தேவைப்படும் போது இவர்கள் நல்ல வருமானம் ஈட்டி வருவது வெல்கம கதையில் தெரிகின்றது.

நன்றி: 25.06.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மோடியை கேள்வி கேட்டதால் ட்ரோல் செய்யப்படும் பெண் பத்திரிகையாளர்: வெள்ளை மாளிகை கண்டனம்

Next Story

பிலிப்பைன்ஸில் இலங்கையர் கைது