போரில் சுழியோடும் தேசம்!

-யூசுப் என் யூனுஸ்-

ஈரான் மீதான அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரத் தடையால் இன்று ஈரான் அதற்கு மாற்று வழிகளைக் கண்டறிந்து பெரும் சாதனை படைத்திருக்கின்றது. சீனாவுடன் வர்த்தக உறவின் காரணமாக இந்த வருடம் 6.7 பில்லியன் அமொரிக்க டொலர்களை  ஈரான் சீனாவிடமிருந்து வருமானமாகப் பெற்றிருக்கின்றது. மேலும் சீனாவுடன் மிகப் பெரிய வர்த்தகத் தொழிநுட்ப ஒத்துழைப்புகளுக்கும் இது இணங்கி இருக்கின்றது.

Iran's Gaza Drone

இப்போது இரு நாடுகளுக்குமிடையே அண்மையில் மிகப் பெரிய உடன்பாடுகள் கைச்சாத்தாகி இருக்கின்றது. மேலும் அண்மையில் தென் அமெரிக்க நாடுகள் பலவற்றுக்குப் போன ஈரானிய ஜனாதிபதி ரைசிக்கு அந்த நாடுகள் பெரும் கௌரவம் கொடுத்து வரவேற்றிருக்கின்றது. அத்துடன் ஈரான் இந்தியாவுடனும் நல்லுறவைப் பேணி வருகின்றது.

ஈரானின் இந்த நகர்வால் ரஸ்யா மட்டும் சீனா ஆகிய நாடுகளுடனான நெருக்க உறவால் இராணு ரீதியிலும் அது பெரும் சக்தி வாய்ந்த நாடாக வளர்ச்சியடைய அதிக வாய்ப்புக்கள் இன்று ஏற்பட்டிருக்கின்றன.

இலங்கையில் கூட ஈரானின் கை ஓங்குகின்றது என்று அமெரிக்கா தற்போது ஒப்பாறி வைக்கத் துவங்கி இருக்கின்றது. எனவே உக்ரைன் போரில் இரஜதந்திர ரீதியில் அதிகம் சாதித்த நாடாக இன்று ஈரான் விளங்கி வருகின்றது. ஈரானின் இந்த வளர்ச்சி மத்திய கிழக்கில் மட்டுமல்ல உலக அரங்கிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியும்.

நன்றி: 25.06.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

சீனாவிடம் அமெரிக்க சரண்!

Next Story

ரணிலைப் பாதுகாப்போம் பசில்!