UMA  செயற்பாடுகள் விரிவாகின்றன!

UMA என்ற உடதலவின்ன ஊடகக் கூட்டமைப்பின் செயற்குழு இன்று (17.06.2023) அதன் செயலகத்தில் தலைவர், சகோ.பரீல் தலைமையில் கூடியது. அதன்போது அமைப்பு கடந்த காலங்களில் மேற்கொண்ட செற்பாடுகள் தொடர்பாக சபைக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அவை தேசிய ரீதியிலான செயற்பாடுகளாகவும் பிரதேச ரீதியிலான நடவடிக்கைகளாகவும் இருந்தன. அது தொடர்பாக தலைவர் சபைக்கு விளக்கமளித்தார்.

அதன் பின்னர் அமைப்பு சமூக நலனை முன்னிட்டு தனது செயற்பாடுகளை விரிவுபடுத்துவது தொடர்பான கருத்துக்கள் சபைக்கு முன்வைக்கப்பட்டன. இறுதியாக ஊடகக் கூட்டமைப்பின் நெறிப்படுத்தலில் பின்வரும் பிரிவுகளை தோற்றுவிக்க வேண்டும் என்று சபை ஏகமனதாகத் தீர்மானித்ததுடன் அதற்கான அங்கிகாரத்தையும் செயற்குழு வழங்கியது.

அதன்படி சமூக நலன் கருதி தேசிய, பிரதேச நலன்களுக்காக பின்வரும் பிரிவுகனை உருவாக்குவது என்று தீர்மானிக்கப்பட்டது. இவ் அமைப்புக்களில் உருவாக்கம் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டு, அது விரைவில் தலைவர் பார்வைக்குக் கையளிக்கப்பட்டு நிருவாக சபையின் அங்கிகாரத்துக்காக சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது.

உத்தேச குழுக்கள்

1.சிவில் அமைப்பு
2.கல்விப் பிரிவு.
3.துறைவாரியான நிபுணத்துவக் குழுக்கள்.
4.ஊடக ஊக்குவிப்பு வேலைத் திட்டங்கள்

Previous Story

காணாமல் போன கட்சி!

Next Story

தமிழருக்கு தீர்வு நாடகமே.!