ஈரானிடம் 10 அணு குண்டுகள்!

-யூசுப் என் யூனுஸ்-

இன்று முழு உலகமும் தனது ஊடகங்கள் ஈரான்… ஈரான்… என்றுதான் உச்சரித்துக் கொண்டிருக்கின்றது. உக்ரைன் பேரிலும் திருப்பு முனையும் ஹீரோவும் ஈரான்தான். அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளுக்கு மத்தியில் கடந்த 10 வருடங்களில் ஈரான் மிகப் பெரிய சாதனைகள் பலவற்றை நிகழ்த்தி உலகுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தி வருகின்றது.

Putin's friend to make nuclear bomb in 12 days? U.S. spooked by Uranium enrichment in Iran - YouTube

ஆயுதத்தை ஆயுதத்தால்தான் வெல்ல முடியும் என்பதனை ஈரான் மீண்டும் நிருவி இருக்கின்றது. ரஸ்யா-அமெரிக்க, இந்தியா-பகிஸ்தான், சீனா-இந்திய முறுகல்கள் ஆயுத சம பலத்தால் முடிச்சுப் போடப்பட்டிருக்கின்றது. மத்திய கிழக்கிலும் இஸ்ரேலின் வல்லாதிக்கம் ஈரானின் இந்த ஆயுத வல்லாதிக்கம் மூலம் கட்டுக்குள் வரலாம் என்று எதிர்பார்க்க முடியும்.

வாளுக்கு வாள் துப்பாக்கிக்கு துப்பாக்கி அணுவுக்கு அணு என்பதுதான் இன்று சமாதானத்தின் குறியீடு என்று அமைந்திருக்கின்றது. நாம் பார்த்த தகவல்களின் படி இந்தளவுக்கு சர்வதேச அரங்கில் அமெரிக்க மற்றும் இஸ்ரேலுக்கு ஈரான் சண்டித்தனம் காட்ட அதனிடம் 10-15 வரையிலான அணுகுண்டுகள் தயார் நிலையில் இருப்பது காரணம்.!

Iran Nuclear Weapons

இது எப்படிச் சாத்தியம்?

யார் கண்ணிலும் படாமல் இஸ்ரேல் பல டசன் கணக்கான அணு குண்டுகளை தயாரிக்க முடியுமாக இருந்தால் இதுவும் சாத்தியமே. அத்தோடு  ஈரான் தனது மண்ணில்தான் இவற்றை பரீட்சித்துப் பார்க்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. அதற்கு எத்தனையோ மார்க்கங்கள் இருக்கின்றன.

நன்றி: 18.06.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

தாய்க்காக 20 கோடி செலவில் 'தாஜ்மஹால்' மகன் சொல்லும் நெகிழ்ச்சி கதை

Next Story

நீருக்கடியில் போகும் விளக்கு!