சகல பாடசாலை உபகரணங்களின் விலை குறைப்பு

அதன்படி குறித்த பொருட்களின் விலைகளை 20% முதல் 25% வரை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

ரூபாவின் பெறுமதி வலுவடைவதைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கடனுதவி வழங்குவதற்கான நிபந்தனைகள் தளர்த்தப்பட்டுள்ளன. இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு மற்றும் வங்கி வட்டி குறைப்பு காரணமாக இந்த பொருட்களின் விலை அடுத்த மாதத்தில் 35% முதல் 40% வரை குறையலாம்.

தற்போதைய சலுகைகளின்படி உற்பத்திப் பொருட்களின் விலை 20% முதல் 25% வரை குறைக்கப்படும்.

அதன்படி 4,000 ரூபாய்க்கு விற்கப்படும் புத்தகப் பை அல்லது ஒரு ஜோடி காலணியின் விலை தோராயமாக 3,000 ரூபாவாக குறையும்.

100 ரூபாய்க்கு விற்கப்படும் பயிற்சிப் புத்தகத்தின் விலை 75 முதல் 80 ரூபாய் வரை குறைவதுடன், 30 நாட்களுக்குப் பின்னர் அதன் விலை 60 ரூபாவாகக் குறைக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

Previous Story

‘தி கேரளா ஸ்டோரி’ இயக்குநரின் புதிய படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்!

Next Story

மூவேந்தர் அரசியல் கூத்து!