சட்டம்  தரும் பதில் என்ன!

-நஜீப்-

தனக்குள்ள 125 வரையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பாவித்து ஒலிபரப்பு ஆணைக்குழுச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ள ஆட்சியாளர்களுக்கு அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றது. அதற்கு ஆதரவாகக் கையைத் தூக்கிவிட்டு அதற்கும் ஒரு நியாயத்தை இவர்கள் மக்களுக்குச் சொல்வார்கள்.

இதுவல்ல நமது பிரச்சனை. இன்று போலியான செய்திகளை வெளியிடுவதில் முன்னணியில் இருப்பது அரசாங்கமும் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுமே. அப்படியானால் அவர்களுக்கு எதிராக இந்த ஆணைக்குழு என்ன  நடவடிக்கை எடுக்கப் போகின்றது?

THE ONE LAW FOR SRI LANKA – The Island

அடுத்து நாடாளுமன்றத்தில் இருக்கின்ற வரப்பிரசாதங்களைப் பாவித்து உறுப்பினர்கள் பொய் சொல்வதற்கு வழங்கப்பட்டிருக்கின்ற வாய்ப்புக்களைப் பாவித்து அங்கு சொல்கின்ற போலியான செய்திகள்-தகவல்கள் மீது இந்த சட்டம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகின்றது என்பது நமது அடுத்த கேள்வி.

இந்த சட்டம் அமுலுக்கு வந்த  பின்னர் சுனாமி கொள்ளை மத்திய வங்கிக் கொள்ளை மற்றும் ஆளும் தரப்பு உறுப்பினர்களின் ஊழல் மோசடிகள் தொடர்ப்பில் எந்தச் செய்திகளையும் மக்களுக்கு ஊடகத்துறையினர் வழங்க முடியாது போகும். ஆட்சியாளருக்கு ஒரு சட்டம். குடிகளுக்கு ஒரு சட்டம்தான் வருகின்றது போலும்.

நன்றி: 11.06.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் இருக்கிறாரா..! மிலிந்த மொரகொடவின் பதில்

Next Story

உக்ரைன் கௌரவ போர் களம்!