பைபிளில் ஆபாசம், வன்முறை? – பள்ளிகளில் தடை!…?

Knust writes that "the story of the garden of Eden is the second of two creation stories, the first of which offers quite a different picture of male-female creation, one in which God creates humankind all at once."

கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் அநாகரிகம் மற்றும் வன்முறையைத் தூண்டும் வகையிலான தலைப்புகள் இடம்பெற்றிருப்பதாக எழுந்த புகாரை அடுத்து அமெரிக்காவின் உட்டா மாநிலத்தில் உள்ள ஒரு கல்வி மாவட்டம், ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் இருந்து பைபிளை நீக்கியுள்ளது.

கிங் ஜேம்ஸ் பைபிளில் குழந்தைகளுக்குப் பொருத்தமற்ற தலைப்புகள் இருப்பதாக பெற்றோர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் இருந்து பைபிள் அகற்றம்

உட்டாவின் குடியரசுக் கட்சி அரசு கடந்த 2022 இல் “அநாகரிகமான அல்லது அநாகரீகமான” புத்தகங்களை பள்ளிகளில் இருந்து தடை செய்யும் சட்டத்தை இயற்றியது.

இதுவரை தடை செய்யப்பட்ட புத்தகங்களில் பெரும்பாலானவை பாலியல் தொடர்பான பார்வை மற்றும் பாலின அடையாளம் உள்ளிட்ட தலைப்புகளுடன் தொடர்புடையவை.

ஏற்கெனவே தன்பாலின ஈர்ப்பாளர்களின் உரிமைகள், பாலின அடையாளம் போன்ற சர்ச்சைக்குரிய தலைப்புகளில் உள்ள போதனைகளை அமெரிக்காவில் தடை செய்ய வலியுறுத்தி, பழமைவாதிகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பைபிளைத் தடை செய்யும் இது போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

டெக்சாஸ், புளோரிடா, மிசோரி மற்றும் தென் கரோலினாவிலும் இதே போன்ற சில புத்தகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சில தாராளவாத மாநிலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் நூலகங்களிலும் பைபிள் தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு டிசம்பரில் பெற்றோர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து, சால்ட் லேக் சிட்டிக்கு வடக்கில் உள்ள டேவிஸ் கல்வி மாவட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளின் பாடத்திட்டங்களுக்கு கொஞ்சமும் சம்பந்தமற்ற பைபிள் ஏற்கெனவே இப்பள்ளிகளின் நூலகங்களில் 7 அல்லது 8 பிரதிகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், அவற்றை அகற்றிவிட்டதாக பள்ளிகள் அறிவித்துள்ளன.

இருப்பினும், இது குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவினர், பைபிளின் எந்த பத்திகளில் “அநாகரிகமான அல்லது வன்முறையைத் தூண்டக்கூடிய தகவல்கள்” உள்ளன என்பதை தனியாக விவரிக்கவில்லை.

2022 புத்தகத் தடை சட்டத்தை மேற்கோள் காட்டி புகார் அளித்த பெற்றோர்கள், சிறுவர்களுக்குப் பொருத்தமான தலைப்புகளில் கிங் ஜேம்ஸ் பைபிளில் எந்த ஒரு தலைப்பும் இல்லை என்றும், ஆனால் ஆபாசப் படங்கள் மட்டுமே நிறைந்திருப்பதாகவும் தெரிவித்திருந்ததாக சால்ட் லேக் ட்ரிப்யூன் செய்தித்தாள் குறிப்பிடுகிறது.

2022 ஆம் ஆண்டு சட்டத்தை வடிவமைத்த உட்டா மாநில சட்ட நிபுணர்கள், பைபிளை தடை செய்வதற்கான கோரிக்கைகளை ஏற்க மறுத்தனர். ஆனால் இந்த வாரத்தில் அவர்கள் எடுத்த முடிவின்படி, தொடக்கக் மற்றும் நடுநிலைக்கல்வி பயிலும் குழந்தைகளுக்கு பொருத்தமற்ற தகவலை பைபிள் அளிப்பதாக அறிவித்து தங்களது போக்கை மாற்றிக்கொண்டுள்ளனர்.

“பாரம்பரியமாக, அமெரிக்காவில், பைபிள் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகிறது என்பது மட்டுமல்லாமல் சிறந்த முறையில் புரிந்து கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகளுக்கு பைபிள் சிறந்த முறையில் அறிமுகப்படுத்தப்படுகிறது,” என கென் ஐவரி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு சட்டத்தை பைபிளின் உள்ளடக்கம் எந்த வகையிலும் மீறவில்லை என்றும், ஆனால் “அதில் உள்ள அநாகரிகமான தகவல்கள் மற்றும் வன்முறை” கருத்துக்கள் இளம் குழந்தைகளுக்கு ஏற்றவை அல்ல என்று, தற்போது பைபிளை பள்ளிகளில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுத்துள்ள கல்வி மாவட்டத்தின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உயர் நிலைப் பள்ளிகளில் பைபிள் தொடர்ந்து இருக்கும் என்றும் இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பள்ளிகளில் இருந்து பைபிள் அகற்றம்

டேவிஸ் பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளி மாணவரின் தந்தையான பாப் ஜான்சன் என்பவர், பைபிளை அகற்றுவதை எதிர்ப்பதாக CBS செய்தியிடம் கூறியுள்ளார் .

“பைபிளில் இருந்து எந்த தலைப்புகளை நீங்கள் அகற்ற வேண்டும் என்று என்னால் யூகிக்க முடியவில்லை. மேலும், அநாகரிக படங்கள் இருப்பது போலும் தெரியவில்லை,” என்றார் அவர்.

அமெரிக்காவில் டேவிஸ் பள்ளி மாவட்டம் தான் முதன்முதலாக பைபிளை பள்ளிகளில் இருந்து அகற்றியுள்ளது எனக் கருத முடியாது.

பொதுமக்களின் புகார்களை அடுத்து, கடந்த ஆண்டு டெக்சாஸ் கல்வி மாவட்ட பள்ளிகளில் உள்ள நூலகங்களிலிருந்து பைபிள் அகற்றப்பட்டது.

கடந்த மாதம், கன்சாஸில் உள்ள ஒரு பள்ளியிலிருந்து பைபிளை அகற்றக் கோரி அப்பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்ததும் நினைவுகூரத்தக்கது.

Previous Story

பெரிய மார்பகங்கள் அவமானச் சின்னமா? சிகிச்சையை நாடும் பெண்கள்

Next Story

குறைக்கப்பட்ட லிட்ரோ எரிவாயு விலை!