டாக்டர் சாபி ஏன் அழுதார்!

-நஜீப்-

4 வருடங்கள் 6 நட்களுக்குப் பின்னர் டாக்டர் சாபி மீண்டும் குருனாகலை போதனா வைத்தியசாலையில் கடமையேற்றார். அன்றைய தினமே தான் நான்கு சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டதாவும் அவர் தெரிவித்தார்.

அவர் கடமையேற்ற போது பெரும் எண்ணிக்கையானவர்கள் குறிப்பாக பேரினத்தவர் தனக்கு வாழ்த்துச் சொன்னதாகவும்> அப்போது தான் கதறி அழுததாகவும் சாபி குறிப்பிட்டார். இதில் சிறப்பம்சம்> அன்று கோட்டாவின் தேர்தல் மேடைகளில் சாபிக்கு எதிராக  இனவாதமாகப் பேசிய பலர் நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம்.

Dr. Shafi gets bail - Front Page | Daily Mirror

அன்று எம்மை மூளைச்சலவை செய்து விட்டார்கள் அதனால்தான் இப்படி நடந்தது எனப் பகிரங்கமாக தவறுக்காக மன்னிப்புக் கேட்டதுடன் அதனை சமூக ஊடகங்களிலும் பதிவிட்டும் இருக்கின்றார்கள். செல்வாக்கு மிக்க ஊடகவியலாளர்கள் பலரும் இதில் அடங்குகின்றார்கள். வேலையிலிருந்து இடைநிறுத்தியது தவறு என நீதி மன்றம் தீர்ப்புச் வழங்கி, சம்பளப் பாக்கியை வழங்குமாறு கட்டளையும் போட்டது.

Dr Shafi receives salary arrears, decides to donate for purchase of essential medicines - Ceylon Today

அப்படிக் கிடைத்த பணத்தையும் மேலதிகமாக ஒரு தொகையையும் சேர்த்து குருனாகல வைத்தியசாலையில் தட்டுப்பாடாக இருந்த மருந்துகளுக்கே அந்தப் பணத்தை அவர் செலவு செய்ததும் குறிப்பிடத்தக்கது.

நன்றி: 04.06.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

"திரும்பிய பக்கமெல்லாம்  சடலங்கள், உடல் பாகங்கள்" - பிழைத்தவரின் சாட்சி!

Next Story

வேட்பாளர் தொடர்பில் முடிவில்லை!