வதந்திகள்

கல்லூரியின் நூற்றாண்டுக்கு இரு விழாக்கள். ஏட்டிக்குப் போட்டியாக நடக்கின்றன. சிலர் விழாவைக் குழப்ப முனைகின்றார்கள். என்று உண்மைக்குப் புறம்பாக கதைகள்-வதந்திகள் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன.

இந்தக் கதைகள் நெடுநாள் உயிர் வாழாது. நமது மண்ணில் பிறந்தவர்கள் அந்தளவுக்கு முட்டாள்கள் அல்ல. இது ஓநாய் ஆட்டுக் குட்டிக் கதை என்பதை நம்மவர்கள் அறிவார்கள்.
நூற்றாண்டுக்கு ஒரு விழாத்தான். அதில் மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் கிடையாது. இதனை நாம் அடித்துக் கூறுகின்றோம்.

ஆனால் நூற்றாண்டுக்கு நூறு நிகழ்ச்சியை நடாத்தி இந்த மண்ணின் வல்லமையை-புகழை உலகறியச் செய்யவே நாம் முனைகின்றோம். இது தவறா? மண்ணின் புகழை உலகறியச் செய்வதா? குழி தோண்டிப் புதைப்பதா? உறவுகளே நீங்களே முடிவு செய்யுங்கள்.!

Previous Story

தேசிய மட்டக் கட்டுரைப் போட்டி-2021

Next Story

பண்டோரா பேப்பர்சுகுள் இன ஐக்கியம் பூத்துக் குழுங்குகின்றது!