ரிஷாத் பதியுதீன்  சுயநலவாதி! ஜனாஸா எரிப்பு : முஸ்லிம் எம்.பிக்கள் மீது குற்றச்சாட்டு!! !!! -அலி சப்ரி ரஹீம்

கோவிட்-19 தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படல் வேண்டும் என்று சுகாதார துறையினரின் தீர்மானம் அறிவிக்கப்பட்டபோது, குறித்த வைரஸ் தாக்கத்தினால் மரணமடையும் முஸ்லிம்களது ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான அனுமதி முஸ்லிம்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு தாமும் இந்நாள் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும் முன்னின்று உழைத்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.

தனது நிலைப்பாட்டில் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் இருந்ததாகவும், அதனை சீர்குலைக்கும் வகையில் எதிர்கட்சியில் உள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன் மற்றும் ரவூப் ஹகீம் ஆகியோர் செயற்பட்டதாகவும். இவர் அரசியல் இலாபங்களுக்காகவே என்றும் தெரிவித்திருந்தார்.

இஸ்லாம் மதத்திற்கு எதிரான கதைகள்

ஜனாஸா நல்லடக்க விவகாரம்! முஸ்லிம் எம்.பிக்கள் மீது அலி சப்ரி ரஹீம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு | Permission To Perform Janazas

மத நல்லிணக்கத்தினை குலைக்கும் வகையில் இஸ்லாம் மதத்திற்கு எதிராக கதைகளை கதைத்த ஞானசார தேரர் கூட ஜனாசா அடக்கத்திற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் ஆனால் கர்தினால் மெல்கம் ரஞ்சித் அவர்கள் அதனை எதிர்த்ததாகவும் அலி சப்ரி ரஹீம் தெரிவித்திருந்தார்.

அவ்வாறு இருக்க இலங்கைக்கு அப்போது விஜயம் செய்த அந்நாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரே மேசையில் சந்தித்து கேட்டது ஒரே ஒரு விடயம் தான், உங்களுக்கு ஜனாசா பிரச்சினையை வைத்து அரசியல் செய்ய வேண்டுமா? ஜனாசா பிரச்சினையை தீர்க்கணுமா என்று கேட்டனர். அப்போது தீர்க்க வேண்டும் எனக் கோரினோம்.

அப்போது இம்ரான் கான் கூறியது தான் இப்போதிலிருந்து ஜனாசா விவகாரத்தில் இருந்து சற்றே தள்ளி இருக்கக் கோரினார். அவர் பாகிஸ்தான் செல்ல மறுபுறம் ஜனாசா அடக்கம் வர்த்தமானி வெளியானது.

எதிர்கட்சியின் ஆர்ப்பாட்டம்

ஜனாஸா நல்லடக்க விவகாரம்! முஸ்லிம் எம்.பிக்கள் மீது அலி சப்ரி ரஹீம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு | Permission To Perform Janazas

இதையே நாமும் செய்ய இருந்தோம். எங்கே எமது தீர்மானம் முடிவுக்கு வருகையில் எதிர்கட்சியில் உள்ள நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் சந்தி சந்தியாக நின்று ஆர்ப்பாட்டம் செய்ய தீர்மானம் பிற்போடப்பட்டது.

ஏனெனில் அவ்வாறு செய்வதால் மக்கள் நினைப்பது ஆர்ப்பாட்டத்தால் தான் ஜனாசா எரிப்பு முடிவுக்கு வந்தது என்று. ஆனால் அதில் உண்மை இல்லை. நாம் இதையெல்லாம் யோசித்து தான் பசில் ராஜபக்சவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டோம் என அலி சப்ரி ரஹீம் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் ரிஷாத் பதியுதீன் ஒரு அரசியல் சுயநலவாதி எனக்கு தனிப்பட்ட கோபங்கள் அவர் மீது இல்லை எனத் தெரிவித்த அலி சப்ரி ரஹீம் அதன் காரணமாகவே தான் அவரை விட்டும் பிரிந்ததாக தெரிவித்திருந்தார்.

Previous Story

உலகின் மிக இளைய யோகா ஆசிரியராக 7 வயது சிறுமி கின்னஸ் சாதனை

Next Story

கடைசி இரு பந்துகளில் ஜடேஜா விளாசிய 10 ரன்களால் 5-வது முறையாக சிஎஸ்கே சாம்பியன்