நுவரெலியா:அறுவை சிகிச்சை செய்த 10 பேரின் கண் பார்வை பாதிப்பு

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளர்களின் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

அண்மையில் கண் சத்திரசிகிச்சைக்குள்ளான 10 நோயாளர்கள் தாம் மீண்டும் உரிய பார்வை கிடைக்காமல் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

10 நோயாளர்கள் பாதிப்பு

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் சத்திரசிகிச்சைக்குள்ளான 10 நோயாளர்களே இவ்வாறு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை செய்த 10 பேரின் கண் பார்வை பாதிப்பு | Eye Damage In 10 People Surgery In Nuwara Eliya

இதில் ஓரளவு கண் பார்வை குறைவாக இருந்து சத்திரசிகிச்சை செய்த பின் முற்றாக பார்வை இழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட அனைவரும் 50 வயதிற்கும் மேற்பட்டவர்களாக உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளர்களின் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் உண்மை என நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மகேந்திர செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

விசாரணை ஆரம்பம்

அறுவை சிகிச்சை செய்த 10 பேரின் கண் பார்வை பாதிப்பு | Eye Damage In 10 People Surgery In Nuwara Eliya

மேலும் கூறுகையில்,தேசிய வைத்தியசாலையில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி ப்ரெட்னிசோலோன் மருந்தை பயன்படுத்தியமையால் ஏற்பட்ட சிக்கல் காரணமாக இவ்வாறு ஏற்பட்டிருக்கலாம் என நினைக்கின்றோம்.

தற்போது அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை செய்கிறோம் இன்னும் ஓரிரு தினங்களில் அவர்கள் குணமடைந்து விடுவார்கள் என நினைக்கின்றேன்.

மேலதிக தகவல்கள் எதுவும் நாங்கள் கூற முடியாது இவ்விடயம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் தற்போது கண் அறுவை சிகிச்சையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Previous Story

வடிவுக்கு நடுங்கும் சஜித்!

Next Story

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனிக்கு திப்பு சுல்தான் அச்சுறுத்தலாக இருந்தது ஏன்?