அதிபராகிறார் பைடன் ட்ரம்ப் சகபடிகள் பலர் அந்தர் பல்டி!

WILMINGTON, DELAWARE - JULY 14: Democratic presidential candidate former Vice President Joe Biden speaks at the Chase Center July 14, 2020 in Wilmington, Delaware. Biden delivered remarks on his campaign's 'Build Back Better' clean energy economic plan. (Photo by Chip Somodevilla/Getty Images)

-நஜீப் பின் கபூர்-

அரசியலில் நிரந்தர நண்பனுமில்லை நிரந்தரப் பகைவனுமில்லை. அதே போல் வரலாறு பூராவும் வல்லாதிக்கம் ஒருவனது கையிலோ அல்லது ஒரு நாட்டில் கட்டுப்பாட்டிலோ இருந்ததும் இல்லை. எனவே எதிரிகள் நண்பர்களாவதும் நண்பர்கள் எதிரிகளாவதையும் நாம் கால ஓட்டத்தில் பார்த்து வருகின்றோம். உலக நாகரிகங்களின் இருப்பிடமும் காலத்துக்கு காலம் மாறி மாறிப் போய் இருப்பதiயும் நாம் வரலாறுகளில் படித்திருக்கின்றோம். ஐரோப்பாவை மையம் கொண்டிருந்த வல்லாதிக்கம் ஒரு கட்டத்தில் துருக்கியர்களின் கைகளுக்கு மாறியதும் அப்போது சிலுவைப் போர் இதற்கு ஒரு தீர்வைக் கொடுத்த கதைகளையும் நாம் படித்திருக்கின்றோம்.

ஈருலகப் போர் நேச நாடுகள் அச்சு நாடுகள் என்று தமது பலத்தை உலகில் காட்ட முனைந்தது. இரண்டாம் உலகப் போரின் முடிவு உலகின் வரை படத்தில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்க தலைமையில் நேட்டோவும் ரஸ்யா தலைமையில் வார்சோ கூட்டணியும் உலக ஆதிக்கத்தில் தமது பலத்தைக் காட்சிப்படுத்திக் கொண்டிந்தன. உலகில் எந்த மூளை முடுக்கில் பிரச்சினை என்றாலும் இந்த இரு அணிகளும் அங்கு போய் தமது ஆதிக்கத்தைக் காட்சிப்படுத்த முனைந்தன. 1980களில் ரஸ்யா பெரும் நெருக்கடிகளுக்கு ஆளானது. ஆங்கிருந்த ஆட்சியாளர்கள் அமெரிக்காவுக்கு தலை வணங்கும் ஒரு நிலை வந்தது. அமெரிக்க ஏக உலக வல்லாதிக்கத்தை தனது கைகளுக்குள் எடுத்துக் கொண்டது. இது வரை இருந்த உலக சம பலம் அமெரிக்காவுக்கு சார்பாக மாறியது. சோவியத் ஒண்றியம் பல கூறுகளாக பிரிந்தது. அமெரிக்காவின் இந்த வல்லாதிக்கம் ஒரு சில தசாப்தங்களுக்கு மட்டுமே நீடிக்க முடிந்தது.

நொடிந்து போய் இருந்த ரஸ்யாவுக்கு புட்டின் அதிபரானார். தனது முதல் ஆட்சி காலத்திலேயே அவர் ரஸ்யர்களுக்கு மிகப் பெரிய ஆச்சர்யங்களை உண்டு பண்ணும் மெஜிக்காரன் போல் காரியம் சாதித்தார். இதனால் அடுத்த பதவிக் காலத்துக்கு அவர் மிகப் பெரிய பொரும்பான்மையுடன் தெரிவானார். ரஸ்யா மீண்டும் தன்னை சுதாகரித்துக் கொண்டு அமெரிக்காவுக்கு சவாலகளை விடுமளவுக்குத் தன்னை வளர்த்துக் கொண்டது. ஒருவர் இரு முறைகளுக்கு மேல் தொடர்ச்சியாக ஜனாதிபதியாகப் பதவி வகிக்க முடியாது என்ற விதியின் கீழ் அடுத்த பதவிக் காலத்துக்கு புட்டினால் அதிபர் தேர்தலில் போட்டி போடு முடியவில்லை. அவருக்கு இருந்த செல்வாக்கில் அந்த அரசியல் தடையை நம் நாட்டைப்போல் நீக்கிக் கொண்டு விரும்பி இருந்தால் திருத்தி அவர் தேர்தலில் மூன்றாவது முறையும் நின்று வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் கள நிலமை தனக்கு நல்ல வாய்ப்பாக இருந்தாலும் அந்த அநாகரிகத்தை அவர் செய்ய வில்லை.

தனது நெருங்கிய சகாவும் நண்பருமான பிரதமர் டிமித்திரி மெத்வதேவ் ஜனாதிபதி வேட்பாளராக்கி அவரை வெற்றி பெறச் செய்து தனது ரஸ்யா பற்றிய கனவுகளை எந்த வித தங்கு தடைகளுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தார். தனது சகாவின் பதவிக் காலமும் ஏறக்குறைய புட்டினின் காலம் என்றுதான் நாம் பார்க்கின்றோம். அடுத்து வந்த தேர்தலில் மீண்டும் புட்டின் ஜனாதிபதி வேட்பாளராக வந்தார். பெரும் மக்கள் ஆணையுடன் அவர் மீண்டும் ரஸ்யாவுக்கு அதிபரானர். இப்போது மீண்டும் ரஸ்யா உலக அரங்கில் தன்னை உறுதியாக நிலை நிறுத்திக் கொண்டது. இப்போது அமெரிக்காவின் உலக ஏக ஆதிக்கம் சம நிலை என்ற பழைய கட்டத்துக்கு ஏறக்குறைய மாறிவிட்டது.

இந்தப் பின்னணியில் சீனா பெருளாதார ரீதியில் தன்னை ஆச்சர்யப்படத் தக்க வகையில் வளர்த்துக் கொண்டது. அத்துடன் ரஸ்யாவுடன் நெருக்கமாக இருந்து தனது இராணுவ பலத்தையும் வளர்த்துக் கொண்டது. அமெரிக்காவுக்கு இரணுவப் பலம் அதன் உலக ஆதிக்கத்துக்கு எந்தளவுக்கு துணை நின்றதோ அதே போன்று அதன் பொருளாதாரமும் அதன் வல்லமையைக் காட்சிப்படுத்த பக்க துனைணயாக நின்றது. சீனாவின் தற்போதய இந்த அசூர பொருளாதார வளர்ச்சியானது அமெரிக்காவுக்குப் பேரிடியாக அமைந்தது. அது ஆசிய, ஆபிரிக்க, தென் அமெரிக்க என்று தனது வேர்களை பரப்பிக் கொண்டது மட்டுமல்ல ஐரோப்பாவிலும் முதன்மை பெறத்துவங்கி விட்டது. பட்டுப் பாதை மீது உலகலவிய நம்பிக்கை இன்று மேலோங்கிக் காணப்படுகின்றது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் உலகில் நம்பிக்கைக்குறிய பெருளாதார வல்லமை எதிர் வரும் கலங்களில் யார் கையில் இருக்கும் என்று நடாத்திய ஆய்வொன்றில் சீனா என்பதுதான் அனேகமானவர்களின் பதிலாக இருந்தது. இதிலுள்ள வேடிக்கை என்ன வென்றால் ஐரோப்பிய நாடுகளின் ஏக கருத்தும் இதுவாகத்தான் இருந்தது. ஆனால் யப்பானும் தென் கொரியாவும் மட்டும்தான் அமெரிக்காவுக்கு ஆதரவான கருத்துக்களைப் இது விடயத்தில் சார்பாகப் பதிவு செய்திருந்தன.

மரத்தில் விழுந்தனை மாடு மோதுவது போல் அமெரிக்காவுக்கு ட்ரம்ப் அதிபரானார். அவர் நடந்து கொண்ட முறை எடுத்த நடவடிக்கைகள் கோமாளித்தனங்கள் எல்லாம் அமெரிக்கா மீது உலக அரங்கில் இருந்த நல்லெண்ணங்களுக்கு களங்கத்தை ஏற்படுத்தி விட்டது. தொடர்ச்சியாக சீனாவின் பொருளாதாரம் மேலான்மையை அமெரிக்காவல் கட்டுப்படுத்த முடியாமல் போனது. அமெரிக்க தனது நட்பு நாடுகளுக்கு கொடுக்கின்ற உதவித் தொகைகளைத் தொடர்ந்தும் கொடுக்க முடியாத நிலைக்கு ஆளானது. அத்துடன் தனது நிதி ஆண்டுக்குத் தேவையான பணத்தை திரட்டுவதும் அதற்கு சிரமமான காரியமாக இருக்கின்றது. இப்போது அங்கு துண்டுவிழும் தொகை என்று பொருளாதாரம் மாறிவிட்டது. எனவே கடன் வாங்கி பொருளாதாரத்தை சரி செய்ய வேண்டிய நிலை.

இதனால்தான் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் நாம் ஆசிய நாடுகளில் முன் னெடுத்த இராணுவ நடவடிக்கைகள் எம்மை பெரும் நெருக்கடிகளுக்கு ஆளாக்கி விட்டது. அதனால் நாம் எதிர் பார்த்த நண்மைகள் எதுவுமே எமக்கு வந்து சேர வில்லை எனவே நாம் ஒட்டு மொத்தமாக சீரிய ஆப்கானிஸ்தான் ஈராக் ஆகிய நாடுகளில் இருந்து தமது படைகளை வாபஸ் வாங்கிக் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது என்று கூறி இருக்கின்றார்.

இப்போதுள்ள பொருளாதாரப் போட்டியில் சீனாவுடன் எந்த வiயிலும் அமெரிக்காவால் தாக்குப் பிடிக்க முடியாத நிலை காணப்படுகின்றன. சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்க சார்பு நாடுகள் 14 சீனாவுடன் வர்த்தக உடன் படிக்கையொன்றில் கையெழுத்துப் போட்டு அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இது கூட ட்ரம்பின் பலயீனமான நிருவாகத்hல் அமெரிக்காவுக்கு ஏற்பட்ட அவமானமான ஒரு நிகழ்வாக உலக அரங்கில பேசப்படுகின்றது.

கொரோனா நெருக்கடிக்குள்ளும் சீனாவின் அசுர வளர்ச்சிக்குப் பெரிய பாதிப்புக்களை உண்டு பண்ண முடியவில்லை. அது முன்னோக்கி நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. மறுபுறத்தில் அமெரிக்க பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கும் வீழ்ச்சிக்கும் இலக்காகி இருக்கின்றது. ஒபாமா அதிபராவதற்கு முன்னரும் அமெரிக்க பெரும் நெருக்கடிக்கு இலக்காகி இருந்தது. அதனை அவர் ஓரளவுக்குச் சரி செய்தார். ட்ரம்ப் பதவிக்கு வந்ததும் பழைய குருடி கதவைத் திற என்ற கதைக்கு அமெரிக்கா ஆளானது அது இன்று பாதளம் நோக்கிப் பயணம் செய்கின்றது.

பொருளாதார நெருக்கடி சீனாவில் திட்டமிட்ட நடவடிக்கைகள் இன்று அமெரிக்கா மீது பெரும் சந்தேகங்களையும் நம்பிக்கையீனங்களையும் உலக அரங்கில் ஏற்படுத்தி இருக்கின்றது. கொரோனா அமரிக்காவை இன்று அழித்துக் கொண்டிருக்கின்றது. ட்ரம்பின் ஆட்சிக்காலம் முழுவதும் அவர் ஒரு தெருச்சண்டியன் பாணியில் செயல்பட்டு வந்திருந்திருக்கின்றார். மேலும் அவர் ஒரு வாய் வீச்சுக்காரனாகவே கடைசி வரை இருந்திருக்கின்றார். வட கொரியா ஈரான் சீனா போன்று நாடுகள் மீது போர் பிரகடனங்களை செய்தாலும் அவற்றுக்கு எதிராக ஒரு வேட்டையாவது அவர் தீர்க்கவில்லை. அவர் பார்த்த ஒரோ காரியம் ஈரானில் செல்வாக்கு மிக்க படைத் தளபதி சுலைமாணியை கொன்றது மட்டுமே. இதுவும் மொசட்டின் ஒத்துழைப்பு அவருக்கு கணிசமாகக்கிடைத்திருக்கின்றது. ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடாத்த அவர் பலமுறை முயன்றாலும் அதனை அவரால் இன்று வரை செய்ய முடியாமல் போனது இதற்குக் காரணம் ஈரானில் பதிலடி தொடர்பான அச்சமே அன்றி வேறு இல்லை.

ஈரானுடன் செய்து கொண்ட அணு ஒப்பந்ததில் இருந்து அமெரிக்க தன்னிச்சையாக வெளியேற்றிது. இதனால் அந்த ஒப்பந்தத்தை ஈரான் மதிக்க வேண்டிய தேவை யில்லை என்ற நிலையில் தற்போது ஈரான் வித்திக்கப்பட்ட கட்டுப்பாடுகளiயும் மீறி அது 12 மடங்கு அதிகமான அளவு யூரேனியத்தை இந்த காலப்பகுத்தியில் செரிவூட்டிக் கொண்டது என்று ஐ.நா. தற்போது குறிப்பிடுகின்றது. இந்த செரிவூட்டல் இன்று தனக்குத் தேவையான எந்த நேரத்திலும் ஈரான் மூன்று அணுகுண்டுகளை உற்பத்தி செய்து கொள்ள முடியும் என்ற நிலையில் இருக்கின்றன. இன்னும் சிலர் இதனை பத்து வரை என்று கணிப்பீடு செய்திருக்கின்றார்கள்.

இப்படியாக அமெரிக்க பெரும் நெருக்கடியில் இருக்கின்ற ஒரு நிலையில்தான் இன்று பைடன் அங்கு அதிபராகப் 2021ல் பதவியேற்க இருக்கின்றார். அவர் என்னதான் பாக்குவப்பட்ட அரசியல்வாதியாக இருந்தாலும் நிதானமான மனிதனாக இருந்தாலும் அவரால் எதிர்பார்ப்பது போல உடனடியாக அமெரிக்காவை மீட்டெடுக்க முடியாது அந்தளவுக்கு ட்ரம்ப் நிருவாகத்தில் அமெரிக்க நிவாகம் சீர்குழைக்கப்பட்டிருக்கின்றது. இதன் அமெரிக்காவும் அவர்களது நண்பர்களும் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ட்ரம்ப் தனது இறுதி நாட்களில் உலகம் பூராவிலும் குறிப்பாக ஆசிய நாடுகளுக்கு தனது வெளிவிவகார செயலாளர் பொம்பியோவை அனுப்பி வைத்தது அவரது மற்றுமொரு கோமாளித்தன நடவடிக்கை இதனை நாம் முன்பே சொல்லி வந்திருக்கின்றோம்.

பைடனின் தேர்தல் வாக்குறுதிகள் மிகவும் நிதானமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்தது. அது உலக்கிற்கு நம்பிகை தருவதாகக் கூட இருக்கின்றது என்பதும் எமது கருத்து. என்றாலும் அவருக்கு தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற குறைந்தது இந்த பதவிக்காலம் முழுதும் தேவைப்படும். நோய்வாய்ப்பட்ட ஒரு அமெரிக்காவைத்தான் பைடன் பொறுப்றே;க்கின்றார். இந்தக் காலப்பகுதியில் சீனாவும் ரஸ்யாவும் எங்கோ போய்விடும். இன்று ரஸ்யா, சீனா, ஆகிய நாடுகளுக்கிடையில் மிகவும் சிறப்பான உறவு முறை காணப்படுக்கின்றன. மேலும் துருக்கி, ஈரான், பாகிஸ்தான். போன்ற நாடுகளிடையேயும் நெருக்கமான இராணுவ உறவுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆசிய ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க பல ஐரோப்பி நாடுகள் கூட இதன் பின்னால் அமெரிக்காவின் பின்னால் போனால் தமக்கு மீட்சி கிடையாது என்ற நிலையில் இந்தக் கூட்டில் வந்து சேர அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன. ஏற்கொனவே பல ஐரோப்பிய நாடுகள் சீனாவுக்கு நெருக்கமாகி வருவதை நாம் முன்பு ஓரிடத்தில் சொல்லி இருந்தோம்.

முன்பு சொன்ன கூட்டில் சீனாவின் ஆதிக்கம் மேலேங்கி இருப்பதால் இந்தியாவுக்கு அந்தக் கூட்டில் சேர்ந்து இயங்குவது பல வழிகளில் கௌரவப்பிரச்சினைகளும் நெருக்கடிகளும் இருக்கின்றன. ஆனால் ரஸ்யா போன்ற நல்ல நண்பர்களும் அந்தக் கூட்டில் இருப்பதால் இந்தியாவுக்கு அந்தக் கூட்டால் பெரிய ஆபத்துக்களுக்கு இடமில்லை. ஆனால் இந்திய சீனா எல்லை மோதல்கள் இந்த இரு நாடுகளையும் எதிரிகள் போல் மாற்றி இருக்கின்றது. இந்தப் பிரச்சினைகளை பரஸ்பரம் விட்டுக் கொடுப்புக்களுடன் இரு நாடுகளும் களைந்து கொள்ள முடியுமாக இருந்தால் அந்தக் கூட்டு இந்தியாவின் வருகையால் மேலும் பல மட்ங்கு சக்தி பெரும்.

இந்தியாவைப் பொருத்த வரை அமெரிக்காவை நம்பி இருப்பது ஆரோக்கியமானதல்ல என்பதனை தலைவர்கள் உணர்ந்தே இருக்கின்றார்கள். எனவே தான் இந்திய-சீனா எல்லையில் மோதல் கள் நடந்த போது தான் இதற்கு மத்தியஸ்தம் செய்த உதவ முடியும் என்று ட்ரம்ப் சொன்ன போது இரு நாடுகளும் எடுத்த எடுப்பிலே அமெரிக்காவின் கோரிக்கைளை நிராகரித்தது விட்டது.

எனவே ஜோ பைடனும் இந்த நாடுகளுடன் நல்லுறவை வைத்துக் கொண்டுதான் அமெரிக்காவை மீளக் கட்டி எழுப்ப வேண்டி இருக்கின்றது. மேலும் தனது கடைசி நேரத்தில் ட்ரம்ப் ஏதாவது அட்டகாசங்களைப் புரிந்து அமெரிக்காவுக்கு மேலும் பல கெடுதிகளை விளைவிக்க வாய்ப்புக்கள் இருக்கின்றது. ட்ரம்ப் இதனால் உலகிற்கும் அமெரிக்காவுக்கும் விளைக்கின்ற சேதத்தைப் பற்றிக் கவலைப்படுகின்ற ஒரு ஆளே இல்லை.

அடுத்த வருடம் ஜனவாரி 20ல் பதவியேற்கும் ஜோ பைடன் முன்னால் உள்ள மிகப் பெரிய சவால் கொரோனா. அடுத்து பெருளாதார நெருக்கடியையும் நிதிப்பற்றக் குறையையும் சீர் செய்தல.; சர்வதேசத்துடன் மீண்டும் நல்லுறவை வளர்த்தல். தனது இராணுவ வல்லமையைத் தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்ளுதல். தன்னைவிட்டு விலகிப் போகின்ற நண்பர்களை மீண்டும் எப்படியும் தான் பால் ஈர்த்து எடுத்தல் இந்த ஐந்து விவகாரங்களிலும் அவர் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டி இருக்கின்றது. தற்போது 306 ஆசனங்களை பைடனும் 232 ஆசனங்களை ட்ரம்பும் பெற்றுக் கொண்டுள்ளனர். இதற்கிடையில் ட்ரம்ப் ஆதரவளர்கள் தோல்வியை ஏற்றுக் கொள்ளாது இன்னும் தெருக்களில் போராட்டங்ளை நடாத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களை நேரடியாகச் சென்று ட்ரம்ப் ஊக்குவித்துக் கொண்டுவருகின்றார். நாம் நினைப்பது போல் அமெரிக்கர்கள் ஒன்றும் உலகிற்கு வழிகாட்டக் கூடிய ஒரு சமூகம் அல்ல தெளிவாக வரலாற்று வெற்றி பெற்றிருக்கின்ற ஒருவருக்கு பதவியை ஒப்படைக்கு விரும்பாது அவர்கள் இன்று வீதிகளில் இறங்கி வம்பு பண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.

அத்துடன் பிரதம தேர்தல் அதிகாரியையும் ட்ரமப்; தற்போது அதிரடியாகப் பதவி நீக்கம் செய்திருக்கின்றார். ஈரானுக்கு எதிரான தாக்குதல்லொன்றை நடத்துவது பற்றி சில தினங்களுக்கு முன்னர் ட்ரம்ப் இரகசிய கலந்துரையாடலொன்றை நடாத்தி இருக்கின்றார். இதில் அவரது வெளிவிவகாரச் செயலாளர் மைக் பொம்பியோவும் முக்கிய இரணுவத் தலைவர்களும் கலந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் ட்ரம்பின் இந்தத் திட்டத்தை அடியோடு எதிர்த்து இடைநடுவில் கலந்துறையாடலில் இருந்து வெளியேறியதாகவும் நியூயோர்க் டைம்ஸ் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்து குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம் என்ற பெயரில் 768 பக்கங்களைக் கொண்ட நூலான்றை எழுதி, சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டார். இந்த நூல் 24 மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டடுள்ளது. இதில் அவர் தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அரசியல் நிக்ழவுகள் தொடர்பாகவும் அதில் அவர் எழுதி இருக்கின்றார். ஒசாமா பில் லாடன் வேட்டை தொடர்ப்பில் தான் நடவடிக்கை எடுத்த போது இதனை தனது துனை ஜனாதிபதி ஜோ பைடன் துவக்கத்தில் கடுமையாக எதிர்த்திருக்கின்றார். இது ஆபத்தான வேலை என்பது அவர் கருத்து. அதே நேரம் ஹிளரி கிளிங்டன் ஒரேயாடியாக தனது திட்டத்தை ஆதரித்தார் என்றும், திட்டம் வெற்றியளித்த பின்னர் ஜோ பைடன் தன்னை வெகுவாகப் பாரட்டியதாகவும் அதில் சொல்லப்பட்டிருக்கின்றது. மேலும் ஜோ தனக்கு நல்ல சகபடியாக அரசியலில் இருந்து வந்திருக்கின்றார். அவர் பதவியேற்ற பின்னர் தான் எந்த விதமான பதவிகளையும் ஏற்கப் போவதில்லை ஆனாலும் அவருக்கு தான் பூரன ஒத்துழைப்பை வழங்குவேன் என்றும் பிரிதொரு நிகழவில் குறிப்பிட்டிருக்கின்றார் ஒபாமா.

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

2021 வரவும் செலவும் புரட்சிகரமானது போலித் தகவல்

Next Story

முஸ்லிம்களுக்கு கோமா ஹீரோவான சாணக்கியர்