புதிய எல்லை நிர்ணயம்: இறுதி வாய்ப்பும் சந்திப்பும்!

உடதலவின்ன ஊடக கூட்டணி கடந்த வாரம் எல்லை நிர்ணயம் தொடர்பான ஒரு சந்திப்பை மேற்கொண்டிருந்தது. அதில் நமக்கு ஏற்பட்டிருக்கின்ற பாதிப்புக்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினோம்.

அத்துடன் முன்னாள் தேர்தல் ஆணையாளரும் எல்லை நிர்ணயக் குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரியாவுடன் நாம் அடிக்க தொடர்பு கொண்டு கொடுத்த விளக்கங்களினால் அவர் சிறுபான்மை சமூகத்துக்கு பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றது என்பதனைப் பகிரங்கமாக ஏற்றுக் கொண்டதுடன் இக்குறைபாட்டை நீக்க சிபார்சுகளை 26.04.2023 முன்னர் கேட்டிருக்கின்றார். எனவே இது தொடர்பான

…………………………………………………………
தீர்க்கமான சந்திப்பு

பாததும்பற முஸ்லிம் பிரதிநித்துவம்

‘இறுதி வாய்ப்பு’

காதி நீதி மன்றக் கட்டடத் தொகுதி
மடிகே-உடதலவின்ன

14.04.2023
பி.ப. 3.45

தலைமை:ஏ.ஆர்.ஏ.பரீல்

(தலைவர் ஊடகக் கூட்டமைப்பு )

…………………………………………………………

இந்தக் கலந்துரையாடலில் தாங்கள் கட்சிகள் அமைப்புகளின் சிபார்சுகளையும் அமர்வுக்கு வரும் போது எடுத்து வருமாறு கோட்டுக் கொள்கின்றோம்.

அத்துடன் துறையில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகவல்களை வைத்திருப்போர் இதில் கலந்து ஒத்துழைக்குமாறும் கேட்டுக் கொள்க்கின்றோம். இது இறுதி வாய்ப்பு என்பதனை சமூக ஆர்வலர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மிக்க நன்றி
சாபி சிஹாப்தீன்
பிரச்சாரச் செயலாளர்
உடதலவின்ன ஊடக கூட்டணி
0774139392

 

 

Previous Story

200 வருடங்களாக முகவரி இல்லாமல் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் அவலங்கள்

Next Story

ஹைதராபாத் நிஜாமின் நீங்காத 'ஆசை'