புதிய உள்ளூராட்சி நகல் அறிக்கை: சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை காப்பாற்றிக் கொள்ளும் வழிகாட்டல்!

-யூசுப் என் யூனுஸ்-

உள்ளூராட்சி உறுப்பினர் எண்ணிக்கையை (8392) அரைவாசியாக குறைக்கின்ற தனது சிபார்சு அறிக்கையைத் தற்போது முன்னாள் தேர்தல் ஆணையாளரும் புதிய எல்லை நிர்ணயங்கள் தொடர்பான குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய நேற்று பிரதமர் தினேஸ் குனவர்தனவிடம் கையளித்தது தெரிந்ததே.

அவர் தயாரித்திருக்கின்ற இந்த புதிய சிபார்சில் தெற்கில் தழிழ் முஸ்லிம் பிரதேசங்களில் பாரியளவில் பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று தெரிய வருகின்றன. அத்துடன் இது தொடர்பாக சிறுபான்மை அரசியல் தலைமைத்துவங்கள் உரிய முறையில் தமது பணிகளைச் செய்யவில்லை என்றும் குற்றசாட்டுக்கள் எழுந்திருக்கின்றன.

தேசப்பிரிய பிரதமரிடம் கையளித்திருக்கின்ற இந்த நகல் அறிக்கையை ஆளும் தரப்பு ஏற்றுக் கொண்டால் அது வர்த்தமானியில் பிரசுரமாகி விடும். இந்த நகல் சிபார்சுகள் குறிப்பிட்ட பிரதேச சபைகளில் விரைவில் காட்சிப்படுத்தப்பட இருப்பதாகவும் தெரிகின்றது. இதில் பாதிக்கப்பட்டுள்ள சமூகத்தினர் தமது அழுத்தங்களைக் கொடுத்தால் அதில் திருத்தங்களுக்கு வாய்ப்பு ஏற்படும்.

எனவே பிரதேச ரீதியில் தமது பிரதிநித்துவங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதனை எப்படிச் சரி செய்து தமது உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்கலாம் என்பதுடன் அதற்காக எல்லைகளை எப்படி வடிவமைக்கலாம் போன்ற வழிகாட்டல்களையும் ஆலோசனைகளையும் உடதலவின்ன ஊடக கூட்டணி வழங்கத் தயாராக இருக்கின்றது.

இது தொடர்பான மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள விரும்புகின்றவர்கள் உடதலவின்ன ஊடகக் கூட்டணியின் பிரச்சாரச் செயலாளர் சாபி சிஹாப்தீன் அவர்களுடன் (0774139392) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பிந்திய தகவல்களின்படி சிறுபான்மை சமூகங்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது என்ற எமது குற்றச்சாட்டை மஹிந்த தேசப்பிரிய ஏற்றுக் கொண்டிருப்பதுடன். திருத்தங்களுக்கு ஏப்ரல் 30ம் திகதி வரை எல்லை நிர்ணயக் குழுவின் காலம் நீடிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Story

13 வயதில் கர்ப்பம் . 40 வயதில் 44 குழந்தைகள்! ஆனா கணவரே இல்லையாம்! ம்

Next Story

200 வருடங்களாக முகவரி இல்லாமல் வாழும் இந்திய வம்சாவளி தமிழர்கள் அவலங்கள்