/

வொசிங்டன் ஆட்சிதான் நடக்கின்றது!

நஜீப்

ஐஎம்எப். கடன் பெற்றுக் கொண்டதை பலர் பட்டாசு கொழுத்தி, பாற் சோறு சமைத்துக் கொண்டாடியது தெரிந்ததே. ஆனால் அன்று முதல் இன்று வரை இந்தக் கடனைக் கடுமையாக எதிர்த்து வரும் முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் கப்ரால் தொடர்ந்தும் தனது நிலைப்பாட்டில்தான் இருக்கின்றார்.

இது பற்றி அவரிடம் கேட்டால் நாட்டில் இப்போது அரசாங்கம் என்று ஒன்று இல்லை. இப்போது அனைத்தும் வொசிங்டன் சொல்படிதான் இங்கு நடந்து வருகின்றது. அவர்கள் ஆட்சிதான் நாட்டில். இந்த ஐஎம்எப் கடன்களினால் நாட்டில் ஏதுவுமே மாற்றங்கள் நடக்க மாட்டாது.

பொறுத்திருந்து பாருங்கள். என்ன இங்கு நடக்கின்றது என்று அவர்  எச்சரிக்கின்றார். அத்துடன் தான் இதன் பின்னர் மொட்டுக் கட்சிக்காரன் அல்ல சுதந்திரமான ஒரு மனிதன் என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் ஜனாதிபதி ரணிலும் அவருடன் நெருக்கமாகச் செயல்படுகின்றவர்களும் ஐஎம்எப் கடன் ஒரு வரப்பிரசாதம் என்றுதான் வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

நன்றி: 09.04.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ரணில்-ராஜபக்ஸ இரகசிய சந்திப்பு!

Next Story

நீதிமன்ற ஆடை விதிமுறைகள்- முஸ்லிம் பெண் வழக்கறிஞர்கள் ஹபாயா அணிய முடியாத நிலை