எச்சரிக்கை! கண்டியவர்களே சிந்தியுங்கள!;

2020 பொதுத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில் மொட்டுக்கள் தரப்பே வெற்றி பெறும் என்றும், இல்லை நாங்கள்தான் அதனைக் கைப்பற்றுவோம் என்று சஜித் தரப்பும் ஏன் நாங்களும் அதற்கான முயற்ச்சியில்தான் இருக்கின்றோம் என்று யானைக்காரர்களும் கூறுகின்றார்கள்.

இங்கு சிறுபான்மை குறிப்பாக முஸ்லிம்களின் வெற்றி வாய்ப்புப் பற்றிப் பார்க்கும்போது மாவட்டத்தில் 177451 வாக்குகள் இருக்கின்றது.

இதில் ஒரு 73 சதவீதம் வாக்களிக்கின்றார்கள் என்று எடுத்துக் கொண்டால் அந்த எண்ணிக்கை 129539. இதில் ஒரு இரண்டு சதவீதம் நிராகரிக்கப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அந்த எண்ணிக்கை 3549. இதனை 129539-3549ல் இருந்து நீக்கி விடுவோம். அப்போது எண்ணிக்கை 125990.

முஸ்லிம் சமூகத்தின் உணர்வுகளை வைத்து A என்ற தரப்புக்கு இதில் 55 சதவீதம் விழுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அந்த எண்ணிக்கை 69294. இது அந்த அணியில் போட்டியிடுகின்ற இரு வேட்பாளர்களுக்கும் போதுமான எண்ணிக்கை அதனை விட ஒரு 5000ம் விருப்பு வாக்குகள் குறைந்தாலும் அவர்கள் நிச்சயம் பாதுகாப்பாகக் கரை சேர்ந்து விடுவார்கள். வெற்றி பெறுவார்கள். இதுதான் கண்டியத் தேர்தல் வரலாறு.

இப்போது எஞ்சி இருக்கும் முஸ்லிம் வாக்குகள் 56696 வாக்குகள் அதாவது 45 சதவீதம் இதில் யானை சின்னத்தில் போட்டியிடுகின்ற லாபீர் ஹாஜியார் 20 சதவீதமான வாக்குகளைப் பெறுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அந்த எண்ணிக்கை 25198. அத்துடன் யானையில் போட்டியிடுகின்ற இதர வேட்பாளர்கள் 14 பேரும் சராசரியாக தமது தொகுதிகளில் மேலும் 2000 வாக்குகள் வீதம் பெற்றுக் கொள்கின்றார்கள் என்று பார்த்தால் அதன் கூட்டுத் தொகை 28000.

இப்போது யானைக்காரர்கள் கூட்டுத் தொகை 251981+28000 =53198 இது ஒரு ஆசனத்துக்கான ஆரோக்கியமான நிலையாகும். இல்லை இதனை விட இதர ஐக்கிய தேசியக் கட்சியக் கட்சி வேட்பாளர்கள் இன்னும் கனிசமான வாக்குகளைப் பெற்றுக் கொள்கின்றார்கள் என்றால் அவர்கள் மேலும் ஒரு ஆசனத்தை பெற்றுக் கொள்ள வாய்ப்புக்கள் உள்ளது.

அடுத்து எஞ்சியுள்ள முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் பற்றி மீண்டும் தமது கவனத்தைச் செலுத்துவோம். (69294 + 25198 =94492) எஞ்சியுள்ள வாக்குள் (125990-94492) 31498 இதில் C அணியில் இருப்பவர் 15 சதவீதம் பெறுகின்றார் என்று வைத்துக் கொவோம். அந்த எண்ணிக்கை 18898. அடுத்து D அணியில் இப்பவர்கள் அனைவரும் 10 சதவீதம் பெற்றாலும் அந்த எண்ணிக்கை 12599 என்ற அளவுக்குத்தான் வரும். ஜேவிபியும் 3000 வரை முஸ்லிம் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பிருக்கின்றது. அப்படி அமையும் போது மேற்சொன்ன எண்ணிக்கையில் சிறு அளவில் தளம்பலுக்கு இடமிருக்கின்றது.

எனவே C,D வாக்குகள் குப்பைக்குத்தானே போகப்போகின்றது என்பதனை எவரால் மறுக்க முடியும். நமது சமூகம் தனது பிரதிநிதித்துவத்துக்காக வாக்குப் பிச்சை கேட்க்கின்ற இந்த நேரத்தில் குப்பையில் கொண்டு போய் வாக்குகளைக் கொட்டுவது என்ன நியாயம்? இது சமூகத் துரோகமில்லையா?

இவர்கள் எப்படி வெற்றி வாய்ப்புப் பற்றிக் கற்பனை பண்ண முடியும். அல்லது பெரும்பான்மை சமூகத்தினர் இவர்களுக்கு வாக்குப் போடுகின்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அது எந்தளவில் சாத்தியம் என்பதனை நாம் யோசிக்க வேண்டும். எனவே சமூகம் தமது பிரதிநித்துவம் பற்றி உண்மையாக கவலைப்படுமாக இருந்தால் குப்பையில் வீசுவதற்காக வாக்குப் போடுவதா அல்லது வாய்ப்புள்ளவனுக்கு துணைபோவதா என்று சிந்திக்க வேண்டும்.

எமது இந்தத் தர்க்கம் பற்றி சமூகம் சிந்திக்க வேண்டும். புத்திஜீவிகள் சமூகத்தை தெளிவு படுத்தினால் நமக்கு மேலும் ஒரு ஆசனம் நிச்சயம் என்பது உறுதி. அது பறிபோகுமாக இருந்தால் சமூகம்தான் அதற்குப் பொறுப்புக் கூறவேண்டும். இளைஞர்களே சிந்தியுங்கள் புத்திஜீவிகளே மக்களை அறிவூட்டுங்கள். ஆலிம்களே அறிவுரை சொல்லுங்கள்.

பிரபல அரசியல் விமர்சகர் நஜீப் பின் கபூர் 2020 தேர்தல் முடிவுகள் பற்றி தினக்குரல் வார எழுதி இருக்கின்ற கட்டுரையில் கண்டி முஸ்லிம் பிரதிநித்துவம் பற்றிக் குறிப்பிடுகின்றபோது மூன்றாவது பிரதிநிதித்துவத்துக்கான நல்ல வாய்ப்பு லாபீர் ஹாஜியாருக்கு மட்டுமே இருக்கின்றது என்றும் சுட்டிக் காட்டி இருக்கின்றார். அத்துடன் இது கண்டி முஸ்லிம்களின் புள்ளடிகளில் தங்கி இருக்கின்றது என்றும் எழுதி இருக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published.

Previous Story

கண்டி முஸ்லிம்களின் அரசியல் வரைபடம் மாறும்!

Next Story

கொரோனா-2 21 இலட்சம் மரணங்கள்! நாடு அதிர்வு