பசிலின் இரு சண்டைக் காட்சிகள்!

-நஜீப்-

காட்சி-1 அப்போது நாட்டில் நிதி அமைச்சர் பசில். ரணில் எதிரணியில் இருந்தார். பசில் நிதி அமைச்சராக இருந்த போதுதான் ஐஎம்எப்புக்கு போகும் தீர்மானம் எடுக்கபட்டது.  எதிரணியில் இருந்த ரணில், பசிலிடம் ஐஎம்எப் போட்டிருக்கின்ற கட்டுப்பாடுகள் என்ன என்று கேள்வி எழுப்பினர்.

நான் அதனை இங்கு இப்போது ஒரு போதும் சொல்ல மாட்டடேன். இப்போதுதான் துவக்கப் பேச்சுக்களே நடக்கின்றது என்று ரணிலுக்கு எஸ்.பி. பாணியில் கோபத்துடன் பதில் கொடுத்தார் பசில். இன்று கதை தலை கீழாகப் போய் இருக்கின்றது.

காட்சி-2 சில தினங்களுக்கு முன் மொட்டுக் கட்சி கூட்டமொன்றில் பசில் மொரட்டுவ மொட்டு முக்கியஸ்தர் சமன்லால் என்ற முன்னாள் நகர முதல்வருடன் கடும் வார்த்தையில் மோதிக் கொண்டார்.

நான் உங்களைப் போல போட்டு விட்டு ஓட மாட்டேன் என்று சமன் கூறிய போது பசிலுக்கு கோபம் பொத்திக் கொண்டு வர, குடித்துப் போட்டு இங்கு பேச வராதே, காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அடியாட்களைக் கூட்டிக் போய் நீ பண்ணிய அட்டகாசத்தால்தான் அவர்கள் எமது கட்சிகாரர்கள் வீடுகளுக்கு தீயிட்டுக் கொழுத்தி நமக்கு இந்த நிலையும் வந்தது.

இதனைச் செய்ய வேண்டாம் என்று நானும் அண்ணனும் எவ்வளவோ கேட்டோம்.! எங்கே  கேட்டீர்களா என்று பசில் அங்கு கர்ச்சித்தார்.

நன்றி: 26.03.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

சதாம் ஹுசேனை வீழ்த்திய வல்லரசுகள்  வரலாறு எழுப்பும் கேள்விகள்

Next Story

ராகுல் காந்தி: "இந்தியாவின் குரலுக்காக போராடுகிறேன்"