
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க இம்ரான் கானுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதனைத் தொடர்ந்து இவ்வழக்கில் இம்ரான் கானை கைது செய்ய பாகிஸ்தான் போலீஸார் அவரது இல்லம் சென்றனர். தொடர்ந்து இம்ரான் கான் இல்லத்தை அவரது ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு வன்முறை வெடித்தது.
அதன்பின் இம்ரான் செய்தியாளர்களிடம் பேசும்போது, தன்னை கடத்தி படுகொலை செய்ய பாகிஸ்தான் போலீஸார் திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், தன் மீதான 9 வழக்குகளில் இருந்தும் ஜாமீன் கேட்டு லாகூர் உயர் நீதிமன்றத்தில் இம்ரான் கான் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இம்ரான் கானுக்கு அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் வழக்கி உத்தரவிட்டுள்ளனர். இந்த உத்தரவை தொடர்ந்து இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ- இன்சாப் கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.





