யானைப் பசிக்கு சோளப் பொரி!

-நஜீப்-

இன்னும் சில நாட்களுக்குள் IMFமுதற் கட்ட உதவிகள் கிடைத்து விடும் என்று குறிப்பிடுகின்றார்கள். 2.9 பில்லியன் பெறுமதியான இந்த கடன்கள் நான்கு வருடங்களுக்குள் நான்கு கட்டமாக வந்தடைய இருக்கின்றது.

நெருக்கடியைப் பொறுத்தவரை இது யானைப் பசிக்கு சோளப் பொயானைப் பசிக்கு சோளப்பொரி! என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். தற்போது ஏற்பட்டிருக்கின்ற அவலத்தை மாற்றியமைப்பதில் இந்த தொகை எந்தத் தாக்கங்களையும் செலுத்த மாட்டாது என்பது நமது கருத்து.

அதனை மக்கள் பொறுத்திருந்து பார்க்க முடியும். அதில் கூட எந்தளவுக்கு அரசியல்வாதிகள் கொள்ளையடிக்க முடியும் என்றுதான் இன்றும் மார்க்கங்களைத் தேடுகின்றார்கள். இதற்கு நல்ல உதாரணம்தான் புற்று நோய்க்குத் தேவையான மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது.

அதற்காக மருந்து வாங்க விலைமனுக் கோராபட்ட போது அதில் பாரிய ஊழல் நடந்திருக்கின்றது என முன்னிலை சோசலிஸ கட்சி புபுது ஜகொட சுகாதார அமைச்சர் கெஹல்லிய ரம்புகெலயை சாடுகின்றார். 800 ரூபா விலை மனுக் கோரப்பட்ட ஒரு மருந்தை 4000 ரூபாவுக்கு விதி முறைக்கு மாற்றமாக அமைச்சர் அங்கிகரித்திருக்கின்றார் என்று ஜாகொட சாட்டுகின்றார். நோயாளிகளின் அவல நிலையை எண்ணிப் பாருங்கள்.

நன்றி: 19.03.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

என்னைக் கடத்தி கொலை செய்வதே   நோக்கம் -இம்ரான் கான்! 

Next Story

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 9 வழக்குகளில் ஜாமீன்!