கல்முனை காதி நீதிபதியாக சட்டத்தரணி அன்ஸார் மௌலானா 

-Farook Sihan-

கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியாகச் சிரேஷ்ட சட்டத்தரணியும், அகில இலங்கை சமாதான நீதிபதியும், உத்தியோகப்பற்றற்ற நீதவானுமான மருதமுனையைச் சேர்ந்த பளீல் மௌலானா அமீருல் அன்சார் மௌலானா நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 01.03.2023 ஆம் திகதியிலிருந்து காதி நீதிமன்ற நீதிபதியாகச் செயற்படும் வண்ணம் இலங்கை நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மருதமுனையிலும் கிழக்கிலங்கையிலும் புகழ்பெற்ற நன்மதிப்புக்குரிய அன்சார் மௌலானா அவர்கள் பேராதனை பல்கலைக்கழக பொதுப் பட்டதாரியும் இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டமானியும் ஆவார்.

இவர் இலங்கை அதிபர் சேவை முதலாம் தரத்தில் சேவையாற்றி ஓய்வு பெற்றவரும் ஆவார். இவர் சட்டத்தரணி உயர் தொழிலில் 25 வருட நிறைவான ஆளுமையையும் மக்கள் நன்மதிப்பையும் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Story

சீனா: ராணுவத்துடன் பட்ஜெட் செலவினத்தை விவாதிக்கும் அரசு

Next Story

"என் அப்பாவின் பாலியல் துன்புறுத்தல்" மனம் திறந்த குஷ்பு !