உறங்கும் வடக்கு கிழக்கு!

-நஜீப்-

மார்ச் 9ல் உள்ளூராட்சித் தேர்தல் என்றதும் வடக்கு கிழக்கில் அரசியல் செய்கின்ற சிறுபான்மைக் கட்சியனர் துள்ளிக் குதித்துக் கொண்டும் தத்துவம் பேசிக் கொண்டும் புதுவியுகங்கள் அமைத்து தேர்தல் களத்துக்கு வந்திருந்தனர்.

தேர்தலும் கிடையாது அதற்குப் பணமும் கிடையாது என்று ஜனாதிபதி செய்தி சொல்லக் கேட்டு அவர்கள் இப்போது பெட்டிப் பாம்பாகி கூடைக்குள் சுருண்டு விட்டார்கள். ஆனால் தெற்கில் மக்கள் தங்களது ஜனநாயக உரிமைகளுக்காக  தெருவில் போராடி மடிந்து கொண்டிருக்கின்றார்கள்.

இன்று பெட்டிக்குள் சுருண்டிருக்கும் தமிழ் முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் தேர்தல் என்ற அறிவிப்பு மீண்டும் வந்தால் சந்தைக்கு வந்து சமூக உரிமைகள் புதுவியுகங்கள் என்று கூவித் திரிய ஆரம்பிப்பார்கள். இதிலிருந்து இவர்கள் செய்வது தன்னல அரசியல் என்பது தெளிவாகத் தெரிகின்றது.

மக்கள் உரிமைக்காகப் போராடுகின்ற போது இவர்கள் தமது பிரதேசங்களில் அந்த உரிமைக்காக களத்தில் இறங்க வேண்டும். ஆனால் இன்று அவர்கள் காணாமல் போய் இருக்கின்றார்கள். இதுதான் சிறுபான்மை  அரசியல். ரணில் தீர்வு தருவார் என்றவர்களும் அவர்களுக்குக் கொடுத்தால் நமக்கும் தா என்றவர்களும் இப்போது கோமாவில்.!

நன்றி: 05.03.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

மயோனுக்கு எதிரான தீர்ப்பு!

Next Story

தேர்தல் நடக்காது வஜிர அதிரடி!