இதுக்கு மேலே நகர்ந்தால்.. அவ்வளவுதான்! நடுவானில் அமெரிக்க ஜெட்டிற்கு சீனா தந்த வார்னிங்..

தென் சீன கடல் எல்லையில் சீனா மற்றும் அமெரிக்காவின் போர் விமானங்கள் அருகருகே வந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் சீன கடல் எல்லையில் இருக்கும் அதிக அளவு எண்ணெய் வளம்தான் அங்கு நடக்கும் மோதலுக்கு காரணம் ஆகும். அங்கு அதிக அளவில் இருக்கும் எண்ணெய்க்கு யார் சொந்தம் கொண்டாடுவது என்று போட்டி நிலவி வருகிறது.

இந்த கடல் தனக்குத்தான் சொந்தம் என்று சீனா கூறுகிறது. இந்த கடல் பகுதி மொத்தமும் தனக்கு சொந்தம் என்று சீனா கூறி வருகிறது.  துருக்கியை அடுத்து.. பல்வேறு நாடுகளில் உச்சம் அதே சமயம் சீனாவிற்கு எதிராக இதே கடல் எல்லையில் இருக்கும் மலேசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகள் முஷ்டி முறுக்கி வருகின்றன.

இங்கு சீனா சின்ன சின்னதாக தீவுகளை அமைத்து வருகிறது. அங்கு ராணுவத்தை சீனா குவித்து வருகிறது. தென் சீன கடல் பிரச்சனை சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் கடந்த 10 வருடங்களாக தீவிரம் அடைந்துள்ளது. சீனாவின் தென் கடல் எல்லையை யார் சொந்தம் கொண்டாடுவது என்று சண்டை இரண்டு நாடுகளுக்கும் இடையில் நடந்து வருகிறது.

இது பல வருட சண்டை ஆகும். தற்போது இந்த சண்டை பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அங்கு அமெரிக்கா தனது காலடி தடத்தை பதித்து இருக்கிறது. தென் சீன கடல் எல்லை பிரச்சனை மொத்தமாக தென் சீன கடலை கைப்பற்றும் வகையில் சீனா அங்கு கொஞ்சம் கொஞ்சமாக படைகளை குவித்து வருகிறது. பல சிறிய சிறிய தீவுகளை கடந்த இரண்டு வருடங்களில் சீனா அங்கு மொத்தமாக உருவாக்கி உள்ளது.

இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. அதே சமயம் இந்த கடலை ஒரு பக்கம் மலேசியா சொந்தம் கொண்டாடுகிறது. இன்னொரு பக்கம் வியட்நாம் சொந்தம் கொண்டாடுகிறது. இதில் சீனாவிற்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக இங்கு அமெரிக்கா படைகளை குவித்து வருகிறது. தனது கடல் படையையும், விமான படையையும் சீனா இங்கே குவித்து உள்ளது.

முக்கியமாக மலேசியாவின் எண்ணெய் கிணறுகள் இருக்கும் பகுதியில் சீனாவின் போர் கப்பல்கள் அவ்வப்போது அத்துமீறி வருகிறது. இதனால் அங்கே அமெரிக்கா ரோந்து பணிகளை செய்து சீனாவை மிரட்டி வருகிறது. மோதல் பதற்றம் இந்த நிலையில்தான் தென் சீன கடல் எல்லையில் பிலிப்பைன்ஸ் அருகே, பார்சேல் தீவு உள்ளது. இது சீனாவின் படைகள் இருக்க கூடிய பெரிய தீவு. இந்த தீவிற்கு அருகே பிலிப்பைன்ஸ் எல்லையில் சீனாவின் போர் கப்பல் இருந்தது.

இதை பார்த்ததும் அமெரிக்காவின் போர் விமானம் ஒன்று 1000 அடி உயரத்தில் தாழ்வாக பறந்து சோதனை செய்தது. சீன கப்பல் எல்லை தாண்டுகிறதா என்று சோதனை செய்ய அமெரிக்க விமானம் தாழ்வாக பறந்தது. இது பார்த்து அந்த சீன போர்க்கப்பல் எசஹகாரிகை விடுத்தது.

அமெரிக்க போர் விமானமே.. நான் சீன போர்கப்பல் 173. நீ எனக்கு மேலே தாழ்வாக பார்க்கிறாய். இது தவறு. குழப்பம் உன்னுடைய திட்டம் என்ன..? என்று கேள்வி எழுப்பியது. அதற்கு அமெரிக்க பைலட்.. நான் உனக்கு அச்சுறுத்தல் கொடுக்க மாட்டேன். தாழ்வாக இருந்தாலும் நான் குறிப்பிட்ட தொலைவிலேயே இருப்பேன் என்றார்.

இதையடுத்து போர் கப்பல் மிசைல்களை விமானத்தை நோக்கி திருப்பிய சீன கப்பல்.. நீ என் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொடுப்பது போல வருகிறாய்.. நீ என் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொடுப்பது போல வருகிறாய்.. என்று எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து அமெரிக்க விமானியோ..

நான் அமெரிக்கா போர் விமானி.. நான் உங்களிடம் இருந்து தொலைவிலேயே இருப்பேன். உங்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் தர மாட்டேன் என்றார். அச்சுறுத்தல் இதையடுத்து அந்த இடத்திற்கு வந்த சீன போர் விமானம் ஒன்று.. அமெரிக்க விமானியிடம்..

நீங்கள் சீன படைத்தளத்தில் இருந்து வெறும் 12 நாட்டிகல் மைல் தொலைவில்தான் இருக்கிறீர்கள். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு மேல் நீங்கள் கொஞ்சம் கூட நகர்ந்து வர கூடாது. அப்படி நகர்ந்து வந்தால் நீங்கள் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும், என்று கூறினார். இதற்கு பதில் சொன்ன அமெரிக்க விமானி..

இது அமெரிக்காவின் P-8A விமானம். நான் இப்போது வலதுபக்கம் திரும்பபோகிறேன்.. நீங்களும் திரும்பி எனக்கு வழி விடுங்கள் என்று கூறினார். இதையடுத்து அமெரிக்கா போர் விமானம் சர்வதேச எல்லையில் நீண்ட தூரம் செல்லும் வரை.. சீன போர் விமானம் ஏவுகணைகளுடன் அதன் பின்னாலேயே சென்று வழி அனுப்பி வைத்தது.

கிட்டத்தட்ட அமெரிக்க போர் விமானத்தை மிரட்டி திருப்பி அனுப்பி உள்ளது சீன விமானம். பதற்றம் இதனால் வானத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்து உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்புதான் சீனாவின் போர் விமானம் ஒன்று அமெரிக்காவின் கண்காணிப்பு விமானத்திற்கு மிக அருகில் வந்ததாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 21ம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி அமெரிக்காவின் US Air Force RC-135 விமானம் இங்கே அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இருக்கும் பிலிப்பைன்ஸ் எல்லையில் ரோந்து சென்று இருந்தது. அப்போது சீனாவின் J-11 விமானம் அமெரிக்க விமானத்திற்கு மிக அருகில் வந்துள்ளது. இரண்டு விமானம் இரண்டு விமானங்களும் வெறும் 6 மீட்டர் இடைவெளியில் அருகருகே வந்துள்ளன.

எங்கே இரண்டு விமானங்களும் தாக்கிக்கொள்ள போகிறதோ என்ற அச்சம் இதனால் எழுந்துள்ளது. சுமார் 5 நிமிடங்களுக்கு மேலாக இவர்கள் அருகருகே சென்றுள்ளனர். எங்கே இது “டாக் பைட்” எனப்படும் வானத்தில் விமானங்கள் மாறி மாறி சுட்டுக்கொள்ளும் நிலைக்கு தள்ளுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. அதன்பின் அமெரிக்க போர் விமானம் சீனா எல்லைக்கு அருகே பின்வாங்கியதால் அங்கு பெரிய மோதல் தவிர்க்கப்பட்டது.

இரண்டு விமானங்களும் 6 மீட்டர் இடைவெளிக்குள் வந்த இந்த சம்பவம் தென் சீன கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு அடுத்து இந்த பகுதியில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

 

Previous Story

பெண்கள் டி20 உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா

Next Story

மயில்களைக் கொல்ல  உத்தரவிட்டது ஏன்?