முஸ்லிம் தலைவர்கள் தற்போது தமது சமூகத்தை விற்று பிழைப்பதையே தமது தொழிலாகக் கொண்டு இயங்குகின்றார்கள். அண்மையில் குருனாகலையில் பெருந் தொகையான முஸ்லிம் பெண்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இந்தத் தகவலை வெளியிட்டார்.
நான் ஒரு முறை டுனீசியாவுக்குச் சென்ற போது பலஸ்தீனத் தலைவர் யாசீர் அரபாத்தை சந்தித்து அவருக்கு எமது ஒருமைப்பாட்டைத் தெரிவித்தேன். அவருக்கும் எனக்கும் நெருக்கமான உறவு இருந்தது.
சுதந்திரக் கட்சியில் மிகச் சிறந்த தலைவராக பதியுத்தீன் அன்று மஹ்மூத் இருந்தார். அவர் கட்சியை வழிநடாத்துவதில் பெரும் பங்காற்றினார். அவர் போன்ற தலைவர்களே நமக்குத் தேவை. என்றும் பிரதமர் அங்கு குறிப்பிட்டார்.