எதிரும் புதிருமான வாதம்!

-நஜீப்-

தற்போது  தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் பதவி விலகுவது தொடர்பாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் கேட்ட போது.  அதிகாரிகள் மரணிக்கின்றார்கள் சுகயீனமுற்றிருக்கின்றார்கள் அல்லது பதவி விலகி விட்டார்கள் என்பதனைக் காரணமாக வைத்து அறிவிப்புச் செய்யப்பட்டிருக்கின்ற தேர்தலைத் தள்ளிப்போட சட்டத்தில் இடமில்லை என்று அவர் தெரிவிக்கின்றார்.

எனவே ஆணைக்குழு அதிகாரிகளை அச்சுருத்தியோ பதவி விலகச் செய்தோ தேர்தலைத் தள்ளிப் போடும் முயற்சியாலோ தேர்தலைத் தவிர்க்க முடியாது என்று தெளிவாகின்றது.

ஆனால் ஐதேக.வின் கடுவெல அமைப்பாளர் பினர ஜயவர்தன ஆணைக்குழு அதிகாரிகள் பதவி விலகி இருக்கின்ற இந்த நேரத்தில் தேர்தலை நடத்துவது சட்டவிரோதமானதும் அங்கு எடுக்கப்படுகின்ற முடிவுகள் செல்லுபடியற்றதும் எனச் சொல்லி வருகின்றார்.

அங்கு எடுக்கப்படுகின்ற முடிவுகள் சட்டவிரோதம் என்றும் வாதிடுகின்றார் பினர. எதிர்க் கட்சித் தலைவர் சஜித் புதிதாக இதுவரை ஆணைக்குழுக்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படவில்லை என்றும் தெரிவிக்கின்றார்.

நன்றி: 29.01.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

தான்சானியா  ஜனாதிபதியிடம் ரணில் பாடம் கற்றுக் கொள்வாரா..?

Next Story

சஜித்-தலையணை ஏன் இப்படி?