ஜனாதிபதி அடுத்த அழைப்பு!

நஜீப்

சுதந்திர தினத்துக்கு முன்னர் தமிழர்களுக்கு அரசியல் தீர்வை எடுத்து வருவதாகச் சொன்ன ரணிலின் வண்டி சேற்றில் சிக்கி இருக்கின்ற இந்த நேரத்தில் மனிதன்  மலையக, முஸ்லிம் மக்கள் பிரச்சினைகளுக்கும் தீர்வு தருவதாகச் சொல்லி மற்றமொரு இளவ மரத்துக்கு காவலுக்கு மலையக மற்றும் முஸ்லிம் அரசியல் தலமைகளுக்கு அழைப்புக் கொடுத்திருக்கின்றார்.

தற்போது தேர்தல் அறிவிப்பு வந்திருப்பதால் இந்த சமூகங்களின் தலைவர்கள் அதற்கு எந்தளவுக்கு ஆர்வம் காட்டுவார்கள் என்று தெரியவில்லை. இவர்களும் சுதந்திர தினத்துக்கு முன்பு இனப்பிரச்சினைக்கு தீர்வு கதை கோட்டு சம்பந்தன் ஐயாவைப் போல ஓடிப் போய் அந்தக் கருத்தை பாராட்டி அறிக்கை விட்டு ரணிலைப் புகழ்ந்திருப்பார்கள்.

நாம் வழக்கமாகச் சொல்வது போல ஜனாதிபதி ரணிலின் பேச்சு ரூபா நாணயம் போன்றது. அதற்கு சந்தையில் எந்த மதிப்பும் கிடையாது. ஒரு பொழுது போக்கிற்காக சிறுபான்மை தலமைகள் அழைப்பு அமர்வுகளில் போய் கலந்து கொள்ளலாம்.

நாட்டின் பொருளாதார பிரச்சினைக்கு தீர்வு தர வந்த ஜனாதிபதி ரணிலால் இதுவரை ஒரு டொலரையாவது நாட்டுக்கு எடுத்து வர முடியவில்லை என்பதும் தெரிந்ததே.

நன்றி: 15.01.2023 ஞாயிறு தினக்குரல்

Default thumbnail
Previous Story

தாலிபன் ஆட்சியில்  முதல் சூப்பர் கார்!

Next Story

வித்தியாசமான வியூகங்களை வகுத்து போட்டி- ஹக்கீம்