உழைப்பை நம்பும் சிராஜ்: பேட்ஸ்மேன்கள் பயப்படுவது ஏன்?

 இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலியின் இமாலய சதம் சுப்மன் கில் அடித்த சதத்தையும், சிராஜ் வீழ்த்திய விக்கெட்டுகளையும் மறைத்துவிட்டது. ஒருநாள் போட்டிகளில் பவர்ப்ளே ஓவர்களின் போது சிராஜின் பந்துவீச்சு ஒவ்வொரு போட்டிக்கும் மெருகேறி வருவதோடு, பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தி வருகிறது என்றே கூறலாம்.

இன்னும் சில மாதங்களில் பும்ராவுக்கு இணையாக முக்கியத்துவம் வாய்ந்த வீரராக சிராஜ் உருவெடுப்பார் என்று விமர்சகர்கள் கணித்து வருகின்றனர். சிராஜ் மீதான நம்பிக்கைக்கு காரணம், அவரிடம் இருக்கும் பிரத்யேக ஆயுதங்களும், பந்துவீச்சில் காட்டும் வெரைட்டியும் தான்.

வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் அப் ரைட் சீம், கிராஸ் சீம் மற்றும் வோப்புல் சீம் ஆகியவற்றை பந்துவீச்சாளர்கள் வீசுவார்கள். கிரிக்கெட்டில் பந்தின் தையலை தான் சீம் என்று அழைப்பார்கள். அப்படி பந்தின் தையலை பிடித்து மட்டுமே முகமது ஷமி வீசுவார்.

கிராஸ் சீம்

கிராஸ் சீம்

கிராஸ் சீம் என்பது தையல் இல்லாத பகுதியை பிடித்து பந்துவீசுவது. இந்த வகையான பந்துவீச்சை நியூசிலாந்து அணியின் டிம் சவுதி மற்றும் போல்ட் இணை அதிகமாக பயன்படுத்துவார்கள். இந்திய அணியின் பும்ரா, அப்ரைட் சீம் மற்றும் கிராஸ் சீம் என இரு வகையான பந்துகளையும் வீசக் கூடியவர். ஆனால் வோப்புல் சீம் என்பது தையலை பிடித்து பந்துவீசாமல், தையலுக்கு இடது வலது பக்கத்தில் விரல்களை வைத்து வீசுவதாகும்.

ஏன் பேட்ஸ்மேன்களுக்கு சிரமம்?

ஏன் பேட்ஸ்மேன்களுக்கு சிரமம்?

பெரும்பாலும் வோப்புல் சீம் வகையிலான பந்துகளை அதிக பந்துவீச்சாளர்கள் பயன்படுத்த மாட்டார்கள். இந்த மூன்று வகை பந்துவீச்சுகளையும் சிறப்பாக வீசும் பந்துவீச்சாளர்கள் தான் சிராஜ். வோப்புல் சீம் மற்றும் கிராஸ் சீம் இரு வகையிலான பந்துகளும், பிட்ட்சில் குத்திய பின்னரே என்ன நடக்கும் என்பது பந்துவீச்சாளருக்கும், பேட்ஸ்மேனுக்கு தெரியும். இதனால் காரணமாகவே பவர் ப்ளே ஓவர்களில் சிராஜின் பந்துவீச்சை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் திணறி வருகிறார்கள்.சிராஜ் திறன்

சிராஜ் திறன்

இந்த மூன்று வகையான பந்துவீச்சையும் சிராஜ் இந்திய அணியில் இடம்பிடித்ததற்கு முன்னதாக பயன்படுத்தி இருப்பாரா என்று கேட்டால், நிச்சயம் அப்ரை சீமை பயன்படுத்தி இருப்பார். ஆனால் மற்ற இரு வகையான பந்துகளையும் இந்திய அணியில் இடம்பிடித்த பின்னரே அறிந்து, பயிற்சி செய்து திறனை வளர்த்துக் கொண்டிருக்கிறார்.

பந்துவீச்சாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

சிறந்த பேட்ஸ்மேன்கள் நகரங்களில் இருந்தும், சிறந்த பந்துவீச்சாளர்கள் கிராமங்களில் இருந்து மட்டுமே இந்திய அணியில் இடம்பிடித்து வருகிறார்கள். இதற்கு சமூக, பொருளாதார சூழல்களும் முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. அதுபோல் ஜாகீர் கான், முகமது ஷமி, சிராஜ், உம்ரான் மாலிக் என்று இந்திய அணியின் வேகப்பந்துவீச்சுக்கும் இஸ்லாமியர்களுக்கும் பெரும் தொடர்பு உண்டு. ஒவ்வொரு முறையும் உடல் வலிமையை முழுமையாக பயன்படுத்தி பந்துவீசும் வேகப்பந்துவீச்சிற்கு, அதீத உழைப்பு தேவை.

சிராஜிற்கு என்ன தேவை?

சிராஜிற்கு என்ன தேவை?

அதனை காயத்தில் சிக்காமல் செய்பவர்கள் இந்திய அணியில் தொடர்ந்து ஜொலிக்க முடியும். அந்த வகையில் ஒவ்வொரு முறையும் பேட்ஸ்மேன்களை மட்டுமல்லாமல், இந்திய அணி வீரர்களையும் ஆச்சரியப்படுத்தி வரும் சிராஜ், இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரராக விரைவில் உருவெடுப்பார்.

அவருக்கு தேவையானது வழிகாட்டுதல் மட்டுமே. அதனை பயிற்சியாளர்களும் சீனியர்களும் வழங்கினால், இந்திய அணிக்காக உலகக்கோப்பையை பெற்று கொடுக்கப் போகும் வீரர்களில் சிராஜ் முதன்மையானவராக இருப்பார்.

Previous Story

கொதிக்கின்ற வடக்கு கிழக்கு!

Next Story

"மண்ணிலே ஈரமுண்டு" மகிழ்ச்சியில் துள்ளிய ஆப்கான் ஏழை சிறுமி!