–நஜீப்–
அண்மையில் தனியார் தொலைக் காட்சி நிறுவனமொன்றில் நடைபெற்ற கருத்தரங்கில் ஆளும் மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சராகவும் இருந்த டலஸ் அலகப்பெரும வெளியிட்ட ஒரு கருத்து தற்போது அரசியல் வட்டாரங்களில் வைரலாகி வருகின்றது.
டலஸ் ஒரு கௌரவமான அரசியல்வாதியும் கூட. தற்போதய அரசியல் களத்தில் ஜேவிபி. வைபகம் பற்றி அவரைக் கேட்ட போது, தனது வீட்டிலும் இது எதிரொலிக்கின்றது.
தனது இரு புதவல்வர்களும் கூட அணுரகுமார மற்றும் ஜேவிபி. நகர்வுகளில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் தன்னுடன் கருத்துப் பறிமாறிக் கொள்வதாகவும் அவர் அங்கு தெரிவித்தார். அவரது இந்தக் கருத்துக்கள் ஜேவிபி.க்கு ஒரு உந்து சக்தியைக் கொடுத்திருக்க வாய்ப்பிருக்கின்றது.
அநேகமான யூடீப் மற்றும் நிறுவனங்கள் நடாத்திய கருத்துக் கணிப்புக்களில் அணுரகுமாராவுக்கு மிகத் தெளிவான பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகத் தெரிய வந்திருக்கின்றது.
இந்த ஆதரவு பற்றிய கதைகளின் யதார்த்தங்கள் பற்றி எதிர்வரும் நாட்களில் விரிவாகப் பேசலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.
நன்றி: 15.01.2023 ஞாயிறு தினக்குரல்