SEX:ஆண்கள் உயிர் போகவும் காரணமாக இருக்கும்!

பாலியல் வாழ்க்கை குறித்து உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஜப்பான் ஆய்வாளர்கள் ஆண்கள் மத்தியில் செக்ஸ் வாழ்க்கையும் உயிரிழப்பிற்கும் இடையே உள்ள மோசமான தொடர்பைக் கண்டறிந்துள்ளனர். எந்தவொரு மனிதருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அந்தரங்க வாழ்க்கையும் முக்கியமானது.

இணையருடன் மகிழ்ச்சியாகச் செலவிடும் காலம் உளவியல் ரீதியாக நமக்குப் புத்துணர்ச்சியைத் தரும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.  உளவியல் ரீதியாக மட்டுமின்றி, நமது வாழ்க்கைக்கும் கூட செக்ஸ் வாழ்க்கை முக்கியமானது. இது குறித்து உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், அதில் பல ஆச்சரிய தகவல்கள் தெரிய வருகிறது.

ஜப்பான் இதனிடையே ஜப்பானில் நடத்தப்பட்ட புதிய ஆய்வில், பாலியல் உறவில் ஆர்வமில்லாமல் இருப்பது ஆண்களிடையே முன்கூட்டியே மரணத்தை ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறைவான செக்ஸ் ஆர்வம் என்பது சில தீவிர உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அதாவது செக்ஸில் குறைந்த ஆர்வம் கொண்ட ஆண்கள், சுமார் இரண்டு மடங்கு (1.82 மடங்கு) முன்கூட்டியே மரணம் அடைய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அவர் கூறுகிறார்கள். யமகட்டா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. பாலியல் ஆர்வம் யமகட்டா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சுமார் 20,000க்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு செய்தனர்.

ஜப்பானில் கடந்த 10 ஆண்டுகளாக மொத்தம் 8558 ஆண்கள், 12411 பெண்களிடம் பாலியல் ஆர்வம், இதய மற்றும் புற்றுநோய் என மரணத்திற்குக் காரணமான அனைத்து விஷயங்கள் குறித்தும் ஆய்வு செய்தனர். பாலியல் ஆர்வம் மற்றும் உயிரிழப்பு ஆபத்திற்கு இடையே இருக்கும் தொடர்பு இதில்தான் முதன்முதலில் உறுதியாகியுள்ளது.

இதற்கு முன்பு வரை பாலியல் செயல்பாடு மற்றும் பாலியல் திருப்தி உளவியல் ஆரோக்கியத்திற்கு மட்டும் தொடர்பு இருப்பதாகக் கருதப்பட்டது. உண்மைதாங்க! இதயமும் இல்லை! இதய துடிப்பும் இல்லை.. ஆனாலும் சகஜமாக உயிர்வாழ்ந்த நபர்.. எப்படி தெரியுமா குறைவு இத்தனை காலம் பாலியல் ஆர்வத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் இடையிலான தொடர்பு ஆராயாமலே இருந்தனர்.

ஒவ்வொரு முறை மருத்துவ சோதனைக்கு வரும்போது, இவர்களிடம் பாலியல் ஆர்வம் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன.. பாலியல் உறவில் ஆர்வம் இல்லாமல் இருப்பவர்கள், பெரும்பாலும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகவும் நீரிழிவு நோய் உள்ளவர்களாகவும் உள்ளனர். உளவியல் ரீதியாகவும் அதிக அழுத்தம் கொண்டும், அதிகம் சிரிக்கக் கூடச் செய்யாதவர்களாகவே உள்ளனர். இவர்களுக்கே பாலியல் ஆர்வம் குறைவாக உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அதிகம் பாலியல் ஆர்வம் குறைவாக இருக்கும் 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் புற்றுநோயால் உயிரிழக்க 1.94 மடங்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதேபோல இவர் இதய நோயால் இறப்பதற்கும் 1.36 மடங்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. செக்ஸில் குறைந்த ஆர்வம் கொண்ட நபர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியாக இருப்பதில்லை என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவறான வாழ்க்கை முறையால் ஆண்களின் செக்ஸ் ஆர்வம் குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தெளிவாகத் தெரியவில்லை இந்த முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது, செக்ஸில் அதிக ஆர்வம் கொண்டவர்கள் வாழ்க்கையில் அதிக மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். இந்த இரண்டிற்கும் இடையே என்ன மாதிரியான தொடர்பு இருக்கிறது என்பதை ஆய்வாளர்களால் துல்லியமாகக் கூற முடியவில்லை.

இருப்பினும், புகைபிடித்தல், குடிப்பழக்கம் அல்லது அளவுக்கு அதிகமாக உண்ணுதல் போன்ற மோசமான பழக்கங்களால் ஏற்படும் அபாயத்தைக் குறிக்கும் முக்கிய அறிகுறியாக இது இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கை ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கை ஒட்டுமொத்தமாகச் சிறந்த ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்..

நல்ல செக்ஸ் வாழ்க்கை என்பதைச் சிறந்த தூக்கம் தருகிறது, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது, மனச்சோர்வு மற்றும் பதட்டத்தைக் குறைக்கிறது மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. அதேநேரம் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு செக்ஸில் இருமடங்கு ஆர்வம் குறைவாக இருக்கும் போதிலும், அவர்களின் இறப்புகளுக்கும் இதற்கும் எந்தவொரு தொடர்பையும் ஆய்வாளர்கள் கண்டறியவில்லை.

அறிகுறி சுருங்கச் சொல்ல வேண்டும் என்றால் செக்ஸில் குறைவான ஆர்வம் இருந்தால்.. அது ஆண்கள் சீக்கிரம் உயிரிழக்கும் அறிகுறியாக இருக்கிறது. ஜப்பானில் மட்டுமே இப்போதைக்கு இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், இதை உலகின் மற்ற நாடுகளிலும் நடத்த வேண்டும் என்றும் இதன் மூலம் பல புதிய விஷயங்களைக் கண்டறிய முடியும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous Story

இதோ பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகமை

Next Story

ஐயா கால அவகாசம்!