ஐஸ் போதை: இப்படியும் நடக்கலாம்!

எச்சரிக்கை!

தற்போது ஐஸ் போதைப் பொருட்கள் பரவலாகவும் ஏனைய போதைப் பொருட்களை விடவும் குறைந்த விலையில் நாடு பூராவிலும் கிடைத்து வருகின்றது. இந்தப் போதைப் பொருள் வியாபாரிகள் இலக்கு பாடசாலை மாணவர்களாக இருக்கின்றது என்று பொலிசாரும் சிவில் சமூகத்தினரும் எச்சரித்து வருகின்றனர்.

ஐஸ் போதைப் பொருள் தொடர்பில் அரசு தற்போது மரண தண்டனையை அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த ஐஸ் போதைப் பெருள் ஐரோப்பிய நாடுகளில் இருந்துதான் இங்கு கடத்தப்பட்டு வந்திருக்கின்றன என்று உறுதியாகி இருக்கின்றது.

அரசு பிறப்பித்துள்ள இந்த சட்டத்தால் கொழும்பு பிரதான தபாலகத்துக்கு விளையாட்டுப் பொருட்கள் என்ற பெயரில் வந்திருக்கும் பெரும் தொகையான பார்சல்கள் தற்போது உரியவர்கள் பொறுப் போற்காமல் தலைமறைவாகி இருப்பதும் தெரிய வந்திருகின்றது.

போலியான பெயர்களைப் பாவித்து மேற்கு நாடுகளில் இருந்து அவை இங்கு அனுப்பிவைக்கப் பட்டிருக்கின்றன. இப்படி வந்த விளையாட்டுப் பொருட்களை பரிசோதனை செய்த போது இது கண்டறியப்பட்டிருக்கின்றது.

அடுத்து தமது தனிப்பட்ட எதிரிகளை பலிவாங்கவும் இந்த போதைப் பொருட்களை அவர்களது எதிரிகள் பாவிப்பதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தெரிய வருகின்றது. அண்மையில் குருனாகலையில் நடந்த என்பிபி. கூட்டத்தில் இந்த எச்சரிகையை ஜேவிபி. தலைவர் அணுரகுமார திசாநாயக்க பொது மக்களுக்கு விடுத்திருந்தார்.

போதை வியாபாரத்துக்கு எதிரான செயல்பாட்டாளர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தவர்களை நெருக்கடிக்கு ஆளாக்கும் நோக்கில் இந்த ஐஸ் போதைப் பொருட்களைப் பாவிக்கவும் இடமிருக்கின்றது. எனவே தங்கள் நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு வாகனங்கனுக்கு வந்து போவோர்கள் மீது மிகவும் அவதானத்துடனும் எச்சரிக்கையாகவும் பொதுமக்கள் இருக்க வேண்டியுள்ளது.

பிரயாணங்களின் போது எடுத்துச் செல்லும் பேக் போன்றவற்றில் தமக்குத் தெரியாமலே இதனை ஒருவர் நுழைத்து விடவும் இடமிருகின்றது.

சில பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கும் போதை வியாபாரிகளுக்கும் நெருக்கமான உறவுகள் இருப்பதால் அவர்களைப் பாவித்தும் இந்த போதை வியாபாரிகள் தனக்கு வேண்டாதவர்கள்-தொந்தரவாக இருப்பவர்கள் அவரது உறவுகளையும் இந்த உத்தியைப் பாவித்து மாட்டிவிடவும் இடமிருக்கின்றது.

இது போன்று பல இடங்களில் நடந்தும் இருக்கின்றன. எனவே பக்கத்தில் இருப்பவர்கள் வீடுகள் நிறுவனங்களுக்கு வந்து போவோர்களிடத்தில் மிகவும் விழிப்பாக பொது மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என எச்சரிக்கப் படுகின்றார்கள்.

Previous Story

இலங்கை இந்திய மாநிலம்!

Next Story

இறப்பராகும் தீர்வுக் கதை!