நமது மக்கள் மடையர்களா?

-நஜீப்-

இந்த நாட்டில் இருக்கின்ற மக்கள் மந்த புத்திக்காரர்கள்-மடையர்கள் என்ற நினைப்பில் நாட்டில் பலவிதமான கதைகள் அவ்வப்போது சந்தைக்கு விடப்படுகின்றன. அவற்றை நாம் பார்த்தும் படித்தும் வருகின்றோம்.

இப்படி  உள்நோக்குடன் கட்டவிழ்த்து விடப்படுகின்ற சில கதைகளை நாம் இங்கு சுட்டிக் காட்டுகின்றோம். உலகில் மிகவும் சக்தி மிக்க தலைவராக இன்று திகழ்பவர் நமது ஜனாதிபதி ரணில். இந்தக் கதையை சில நாட்களுக்கு முன்னர் சொன்னவர் ஐதேக. சார்பில் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற வஜிர அபோவர்தன.

கட்சிக்கு இருக்கின்ற ஒரே தேசியப் பட்டியில் உறுப்பினரை அவருக்குக் கொடுத்ததற்காக அவர் ரணிலை உச்சியில் வைத்திருக்கக் கூடும். அடுத்து மொட்டுக் கட்சியில் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற 40 பேர் ரணில் தலைமையிலான ஐதேக. வில் இணைய இருக்கின்றார்களாம்.

இந்தக் கதை அந்தக் கட்சியின் செயலாளர் ரங்கே பண்டாரவுடையது. தற்போது ரணில் மொட்டுக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் கிடையாது.  அவர் பொது மக்கள் வேட்பாளர் என்று இதே ரங்கே நமக்கு கதை சொல்லுகின்றது. மொட்டுக் கட்சியும் ஐதேக. வும் வருகின்ற தேர்தல்களில் ரவி கருனாநாயக்காவின் ராஜாலியா சின்னத்தில் போட்டியாம்.! ஐயோ கடவுளே இதை எல்லாம் மக்கள் நம்பனுமா?

நன்றி: 18.12.2023 ஞாயிறு தினக்குரல்.

Previous Story

FIFA 2022 உச்சி முகர்ந்த மெஸ்ஸி - அர்ஜென்டினாவின் வெற்றி

Next Story

FIFA  2022 யாருக்கு எவ்வளவு பரிசு!