தென் கொரிய ஹாலோவீன் நெரிசல்:மேலும் சில தகவல்கள்

தென்கொரியத் தலைநகர் சோலில் மக்கள் கூடும் ஒரு பிரபலமான இடத்தில் ஹாலோவீன் திருவிழாக் கூட்ட நெரிசலில் சிக்கி டஜன் கணக்கானோருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முதலில் டஜன் கணக்கானோருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இறந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள், 19 பேர் வெளிநாட்டவர். எதனால், இந்த நெரிசல் ஏற்பட்டது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

ஆனால், பெருந்தொற்றுக்குப் பிறகு முதல் முறையாக நடக்கும் முகக் கவசம் அணியாத ஹாலோவீன் திருவிழா இது.

சோல் நகரின் இரவு வாழ்க்கைக்குப் பெயர் பெற்ற இடாவூன் என்ற பகுதியில் குறுகலான தெருவில் ஏராளமான மக்கள் ஒரே நேரத்தில் நுழைந்த நிலையில், இந்த விபத்து நேரிட்டது.

2014ம் ஆண்டு படகு மூழ்கி ஏற்பட்ட விபத்தில் 300 பேர் இறந்த சம்பவம் தென் கொரியாவை உலுக்கியது. அதற்குப் பிறகு, ஏற்பட்ட மிகப்பெரிய விபத்து இதுவாகும்.

தொடக்கத்தில், சம்பவம் நடந்த உடனே வெளியான வீடியோக்களில், மயங்கிய நிலையில் உள்ள பலருக்கு தெருவோரத்தில் அவசரகால சேவைப் பணியாளர்கள் சிகிச்சை அளிப்பதையும், ஏராளமான கூட்டம் அந்த இடத்தில் சூழ்ந்திருப்பதையும் பார்க்க முடிந்தது.

பேரிடர் மீட்புக் குழுவினரை அந்த இடத்துக்குச் செல்லும்படி உத்தரவிட்டுள்ளார் அதிபர் யூன் சுக்-இயோல்.

Night city skyline of Seoul

ஹாலோவீன் கூட்டத்தால் நிரம்பி வழியும் சோல் நகரம்.

நேற்று சனிக்கிழமை (அக்டோபர் 29) மாலை நிகழ்வுக்கு முன்னதாக வெளியிடப்பட்ட சமூக ஊடகப் பதிவுகள் சிலவற்றில் இடாவூன் என்ற இந்த நிகழ்விடத்தில் மிக அதிகமாக கூட்டம் இருப்பதாகவும், அது பாதுகாப்பற்றதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மயங்கிய நிலையில் இருந்த பலருக்கு பொதுமக்களும், அவசரகால சேவைப்பிரிவினரும் சிகிச்சை அளிப்பதாகக் காட்டும் பல புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாயின.

ஒரு குறுதிய வீதியில் ஏராளமானோர் மீட்புதவியாளர்கள் பாதிக்கப்பட்டோருக்கு சுவாச மீட்பு சிகிச்சை அளிப்பதை காட்டும் படம் ஒன்றும் பகிரப்பட்டது.

இடாவூன் அருகே உள்ள ஹாமில்டன் ஓட்டல் பக்கத்தில் ஒரு விபத்து நடந்திருப்பதாகவும், மக்கள் விரைவாக வீடு திரும்பவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளும் அவசரகால செய்தி ஒன்று யோங்சான் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு அலை பேசிக்கும் அனுப்பப்பட்டது என்று உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவித்தார்.

நேரில் கண்ட சாட்சி கூறியது என்ன?

இடாவூன் பகுதியின் குறுகலான தெருக்களில் மக்கள் வெள்ளமாக குவியத் தொடங்கியபோது, ஏற்பட்ட குழப்பம் பெரும் துயர சம்பவமாக மாறியது எப்படி என்பதை நேரில் கண்டவர்கள் விளக்குகிறார்கள்.

அங்கே பல பத்தாயிரம் பேர் இருந்ததாகவும், தாம் பார்த்ததிலேயே இது மிகப்பெரிய கூட்டம் என்றும், ஒரு கட்டத்தில் அவர்கள் நடைபாதை நோக்கி அழுத்தப்பட்டதாகவும் பிபிசியிடம் விவரித்தார் ரஃபேல் ரஷீத் என்ற சுயதீன செய்தியாளர்.

ஹாலோவீன் உடைகளில் தெருக்களில் குவியத் தொடங்கிய இளைஞர்கள், இரண்டாண்டு கால கொரோனா இடைவெளிக்குப் பிறகு இந்த முறை ஹாலோவீனை கொண்டாடப் போகும் உற்சாகம் அவர்களிடம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. ஆனால் உண்மையில், பெரும் கோர சம்பவம் ஒன்று அவர்களுக்காக காத்திருந்தது என்பதை வெளியாகும் வீடியோக்கள் காட்டுகின்றன.

அங்கு காட்சி ஒரு போர் சினிமாவை ஒத்திருந்ததாக ஒரு நேரில் கண்ட சாட்சி கூறுகிறார். நெரிசலில் சிக்கி நசுங்கிய பலரது முகங்கள் வெளிறிப் போனதாக மருத்துவர் ஒருவர் கூறினார்.

“அவர்களை நான் பரிசோதித்தபோது, பலருக்கு சுவாசமோ நாடித்துடிப்போ இருக்கவில்லை. சிலருக்கு மூக்கில் ரத்தம் வழிந்தது,” என்கிறார் அந்த மருத்துவர்.

2,900 பேரைக் காணவில்லை

சனிக்கிழமை சோல் நகரில் நடந்த சோக சம்பவம் தொடர்பாக, 2,900 பேரை காணவில்லை என்ற புகார்கள் வந்துள்ளதாக ஹன்னான்-டாங் சமுதாய சேவை மையம் பிபிசியிடம் கூறியது.

ஹாலோவீன் திருவிழாவுக்கு வந்து, இதுவரை வீடு திரும்பாதவர்களின் குடும்பத்தினர் மையத்தில் புகார்களைப் பதிவு செய்துவருவதாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் கூறுகின்றனர். இந்த மையம், விபத்து நடந்த இடத்தில் அமைந்துள்ளது.

அத்துடன், இன்னும் வீடு திரும்பாத தங்கள் குடும்பத்தினரைப் பார்க்க அவர்களது உறவினர்கள் பலர் இந்த மையத்தில் வாசலில் பரிதவிப்போடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

 

Default thumbnail
Previous Story

Next Story

போதைக்கு அடிமையான வாசிம் அக்ரம்!