90% + உள்ளூராட்சி மன்றங்கள் NPP. வசம்!

-நஜீப் பின் கபூர்-

Hizbullah responds to accusations over Batticaloa campus

தேர்தலுடன் ஹக்கீம் தலைமைக்கு ஆப்பு வருகின்றது!
ஹிஸ்புல்லாஹ் காத்தான்குடியில் அதிரடி வியூகம்!

வருகின்ற மே ஆறாம் திகதி நடை பெறுகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தொன்னூறு சதவீதத்துக்கும் மேற்பட்ட பிரதேச சபைகளை ஜனாதிபதி அனுர தலைமையிலான என்பிபி. வசமாகின்றது என்று நாம் அடித்துக் கூறுகின்றோம். அந்த மன நிலையில்தான் பெரும்பான்மையினம் இருக்கின்றது. அதே போன்று வடக்கு கிழக்குத் தமிழ் பிரதேசங்களிலும் என்பிபி. தான் ஆதிக்கம் செலுத்தப் போகின்றது.

வடக்கில் யாழ்ப்பாணம் மா நகர சபை கூட என்பிபி.தான் கைப்பற்றப் போகின்றது என்று அங்கிருந்து தகவல்கள் வருகின்றன. இதனை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று அங்குள்ள சம்பிரதாய அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போது முயன்று கொண்டிருக்கின்றார்.

பிரபாகரன் ஆண்ட மண்ணை அன்னியர்களிடம் கொடுத்து விடாதீர்கள் என்று அன்று பிரபாகரனை எதிர்த்தவர்கள் கூட இன்று அவர் நாமத்தை சொல்லி வோட்டுக் கேட்கின்ற அவலம்.

தனித்துவ முஸ்லிம் தலைமைகள் தமது கோட்டை என்று அழைத்துக் கொள்ளும் கிழக்கில் கூட என்பிபி. தான் அவர்களுக்குப் பிரதான எதிரி. எந்த ஒரு அரசியல் தலைவரும் நாம் இந்த பிரதேச சபையை நிச்சம் வெற்றி பெறுவோம் என்று உறுதியாக சொல்லவில்லை.

சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி அரசியல்வாதிகள் தேர்தலில் நாம் 100 வரையிலான சபைகளைக் கைப்பற்றுவோம் என்று பெயருக்குச் சொல்லிக் கொண்டாலும் அவை எது என்று ஒன்றைக் கூட அவர்கள் பட்டியலிட்டுச் சொல்லத் தயாராக இல்லை.

தேர்தல் முடிவுகள் என்ன என்பது அனைவருக்கும் தெரியும். எனவேதான் இந்தத் தேர்தல் சூடுசொரனை இல்லாத தனிக்குதிரை ஓட்டமாக இருக்கின்றது. ஆனாலும் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு சின்ன அதிருப்தி இருப்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். என்றாலும் என்பிபி. பிரதேச சபைகளைக் கைப்பற்றுவதில் அது எந்தத் தாக்கங்களைச் செலுத்தக் கூடிய நிலையில் இல்லை.

கனிசமான முஸ்லிம்கள் என்பிபி.க்கு ஆதரவாக வாக்களிக்கத் தயாராக இருப்பதையும் அவதானிக்க முடிகின்றது. ஒரு சில முஸ்லிம் வட்டாரங்களில் நெருக்கமான போட்டி நிலையும் தெரிகின்றது.

ஹக்கீமின் கோட்டைகள் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இடிந்து விழுகின்ற காட்சிகளையும் தேர்தலில் பார்க்கக் கூடியதாக இருக்கும். எனவேதன் தேர்தல் தோல்விகள் ஒன்றும் நமக்குப் புதிதல்ல என்று ஹக்கீம் இப்போது பகிரங்கமாக பேசி வருகின்றார்.

இந்தத் தேர்தலில் நாம் ஒரு விசித்திரத்தை பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. காத்தான்குடியில் ஹிஸ்புல்லாஹ் ஒரு அதிரடி வியூகத்தை அங்கு வகுத்திருக்கின்றார்.

மு.கா.வுடன் இன்னும் நான்கு வரையிலான சுயேட்சைக் குழுக்களை அவர் காத்தான்குடியில் களத்தில் இறக்கி அதன் வேட்பாளர்களுக்கான அறிமுகத்தையும் ஒரே இடத்தில் நடாத்தி இருந்தார்.

இது நமது தேர்தல் வரலாற்றில் ஒரு அதிரடி. எனவே காத்தான்குடி நகர சபையை என்பிபி. வெற்றி கொள்வது முடியாத ஒரு காரியமாக இருக்கும். இது ஹிஸ்புல்லாஹ்வின் தனிப்பட்ட செல்வாக்கு-வியூகமமாக இருக்கின்றது.

ஹிஸ்புல்லாஹ் இப்போது ஆளும் NPP  உறுப்பினர் போல மேடைகளில் பேசி வருகின்றார். அனுர அதிகாரத்துக்கு வந்தால் நோன்பு கிடையாது பெருநாள் கிடையாது என்று முழங்கியவர் இப்போது நாங்கள் எப்போதும் ஜனாதிபதி கட்சிதான் என்று பேசுகின்றார்.

மனிதன் எப்படியும் புகுந்து விளையாடக் கூடிய ஒரு ஆள். இது காத்தான்களுக்கும் தெரியும். இப்போது நகரை ஆசியாவில் ஆச்சர்யமாக மாற்றிக் காட்டுகின்றேன் சபதம் வேறு எடுத்திருக்கின்றார்.

அதே போன்று மன்னார் முசலியில் ரிசாட் பதியுத்தின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும். அக்கரைப்பற்றிலும் இப்படி ஒரு நிலை தெரிகின்றது. அங்கு அதாவுல்லாஹ் ஆதிக்கம் வரலாம்.? இது தவிர வடக்குக் கிழக்கில் ஏனைய அனைத்து இடங்களிலும் என்பிபி. தனது பலத்தைக் காட்டும்.

மலையகத்திலும் சம்பிரதாய அரசியல் கட்சிகள் பெரும் கலக்கத்தில் இருக்கின்றன. இந்தத் தேர்தலுக்குப் பின்னர் ஹக்கீமின் மு.கா. தலைமைத்துவம் தொடர்பாக கிழக்கு முஸ்லிம் சமூகம் ஒரு தீர்மனம் எடுக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

ஹிஸ்புல்லாஹ், ரிசாட், அதவுல்லாஹ், ஹசனலி போன்றவர்கள் இது விடயத்தில் ஒரு தீர்மானத்துக்கு வரவும் இடமிருக்கின்றது.

Previous Story

அகுரண அரசியல் பலம் பலயீனங்கள்!

Next Story

ரணில் அதிரடி வாக்குமூலம்...!