90சதவீத வெற்றி-மைத்திரி!

 நஜீப்

சுதந்திர மக்கள் முன்னணி என்ற பேரில் தற்போது 13 கட்சிகளின் கூட்டணியொன்று நாட்டில் உருவாகி இருக்கின்றது. அதில் மைத்திரி, டலஸ், விமல், கம்மன், வாசு, திஸ்ஸ, அணுர யாப்பா  போன்றவர்கள் உள்ளடக்கம்.?

இந்தக் கூட்டணி நமக்கு அநாதைகளின் கூட்டணி போன்றுதான்  தெரிகின்றது. இலங்கை அரசியலில் இவர்கள் மக்களால் நிராகரிக்கபட்டவர்கள் என்ற நிலையில் இருப்பவர்கள் என்பது நமது கருத்து. இதனால்தான் இவர்களை நாம் அநாதைகளின் அரசியல் கூட்டணி என்று அழைக்கின்றோம்.

உள்ளாட்சி தேர்தலுடன் இந்த அணியின் முகவரி தொலைந்து போக அதிக வாய்ப்புக்கள். இவர்கள் அனைவரும் மொட்டுக் கட்சியில் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்.

கூட்டணி அங்குரார்ப்பன வைபவத்தில் தமது கூட்டணி தேர்தலில் தொன்நூறு சதவீத வெற்றியைப் பெரும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரி அங்கு பேசும் போது தெரிவித்தார்.

அப்படியாக இருந்தால் இந்த 90 சதவீத வெற்றியைப் பெருபவர்கள்தான் அடுத்த அரசாங்கத்தை அமைப்பார்கள் போலும்.! மைத்திரி ஐயா இது எந்தவகை நகைச்சுவை?

நன்றி: 15.01.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்னிப்பு கோரியுள்ள பொது நிர்வாக அமைச்சின் செயலாளர்

Next Story

ஆப்:  ஆண் டாக்டர்களிடம் சிகிச்சை பெற பெண்களுக்கு தடை!