(அஸ்ஹர் இப்றாஹிம்)
இலங்கை பாடசாலைகள் கிரிக்கட் சம்மேளனம்,கல்வியமைச்சுடன் இணைந்து நடாத்தும் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான டிவிஷன் ii கடினபந்து கிரிக்கட் சுற்றுப் போட்டியில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும், பத்தரமுல்ல ஜயவர்த்தன மத்திய கல்லூரிக்குமிடையிலான கிரிக்கட் போட்டி முல்லேரியா எதிரிவீர சரத்சந்திர விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.
முதல் இன்னிங்சில் முதலில் துடுப்பெடுத்தாடிய பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி 126 ஓட்டங்களுக்கு 9 விக்கட்டுக்களை இழந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பத்தரமுல்ல ஜயவர்த்தன அணி 28 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் சகல விக்கட்டுக்களையும் இழந்தது.
போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தாலும், இந்துக் கல்லூரி மாணவன் செல்வசேகரன் ரிஷியுதன் 9.4 ஓவர்கள் பந்து வீசி ஓட்டம் எதுவும் கொடுக்காமல் 8 விக்கட்டுக்களை கைப்பற்றி பெரும் சாதனையொன்றை நிலைநாட்டியுள்ளார்.