75 ஆண்டுகளாக சீக்கியராக வாழ்ந்த இஸ்லாமியர்

“உண்மை தெரிந்த பிறகு நடந்த சகோதர சந்திப்பு.. நெகிழ்ச்சி”

இந்தியா எதிர்கொண்ட பல துயரங்களில் முக்கியமானது இந்தியா-பாகிஸ்தான் பிரிவினைதான். ஏனெனில் இந்த பிரிவினையின் போது ஏற்பட்ட வடு இன்னும் மறையாமல் இரு நாட்டு மக்களிடையேயும் நீடித்து வருகிறது.

அந்த வகையில் 75 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த பிரிவினையின் போது பிரிந்த சகோதரியை சீக்கிய சகோதரர் ஒருவர் தற்போது சந்தித்துள்ள சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதேபோன்ற நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று கடந்த மே மாதம் நிகழ்ந்தது. பிரிவினையின்போது பாகிஸ்தானுக்கு சென்ற தனது சகோதரியை சீக்கிய சகோதரர் நேரில் சென்று சந்தித்திருந்தார்.

1.5 கோடி மக்கள் இடமாற்றம் இந்தியா சுதந்திரமடைந்தது எவ்வளவு மகத்தான தருணமோ அதற்கு நேர் எதிரான தருணமாக அமைந்ததுதான் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை. இதன் காரணமாக சுமார் 1.5 கோடிக்கும் அதிகமான மக்கள் இரு நாடுகளிலிருந்தும் இடம்பெயர்ந்தனர்.

பலர் காணாமல் போயினர், சிலர் காணாமல் ஆக்கப்பட்டனர். பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இவையெல்லாம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும் வடுவாக தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது இந்தியாவின் சீக்கிய சகோதரனும், பாகிஸ்தானின் இஸ்லாமிய சகோதரிகளும் 75 ஆண்டுகளுக்கு பின்னர் ஒருவரை ஒருவர் கண்டுபிடித்து நேரில் சந்தித்துக்கொண்டுள்ளனர். இந்த சந்திப்பு பிரிவினையின் வடுக்களை நினைவுகூர்வதாக உள்ளது.

இவர்களின் கதை இருநாடுகளின் பிரிவினையின் ஒரு புள்ளி வரலாறு. பிரிவினையின்போது அமர்ஜித் சிங் சிறுவனாக இருந்துள்ளார். இவருக்கு ஒரு தங்கையும் இருந்துள்ளார். சீக்கிய குடும்பம் 1947ல் கோடி மக்கள் இருநாட்டு எல்லையை கடந்த போது அதில் இவர்களும் சிறு புள்ளி. ஆனால் துரதிருஷ்டவசமாக ஜலந்தர் பகுதியில் அமர்ஜித் சிங் தனது பெற்றோரிடமிருந்து பிரிந்துவிட்டார்.

உடன் அவரது சகோதரி இருந்திருக்கிறார். இருவரும் என்ன செய்வது என தெரியாமல் விழித்துள்ளனர். அப்போது ஒரு சீக்கிய குடும்பம் அமர்ஜித் சிங்கை தத்தெடுத்து வளர்க்கத் தொடங்கியுள்ளது. அமர்ஜித் பஞ்சாபில் சீக்கிய குடும்பத்தில் வளர்ந்துள்ளார். தேடுதல் அதேபோல மறுமுனையில் பாகிஸ்தான் சென்ற பெற்றோர் தனது குழந்தைகள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என தெரியாமல் வாழ்ந்து வந்துள்ளனர்.

காலம் கடந்துள்ளது. இந்த உலகத்தில் மறைத்து வைப்பதற்கென்றோ, ரகசியம் என்று எதும் கிடையாது, என யாரோ சொன்னதுபோல 75 ஆண்டுகள் கழித்து தனது பிள்ளைகளை தேடும் பொறுப்பை அமர்ஜித் சிங்கின் பெற்றோர் மூன்றாவதாக பிறந்த தனது மகளிடம் கொடுத்துள்ளனர்.

இதனையடுத்து மூன்றாவது மகள் குல்சூம் அக்தர் தனது சகோதரனையும், சகோதரியையும் தேடியுள்ளார். தொடர்பு அப்போது அக்தரின் தந்தையை பார்க்க இந்தியாவிலிருந்து சர்தார் தாரா சிங் வந்திருக்கிறார். இவரிடத்தில் அக்தரின் தாய் தனது தொலைந்துபோன மகன், மகள் குறித்து கூறியிருக்கிறார்.

அக்தரின் தாய் கொடுத்த தகவலின்படி தேடியதில் அக்தரின் சகோதரனை கண்டுபிடிக்க முடிந்துள்ளது. ஆனால் சகோதரி உயிரிழந்துவிட்டிருக்கிறார். இந்நிலையில், அக்தரின் சகோதரர் அமர்ஜித் சிங் என்பது உறுதி செய்யப்பட்டு அவரின் தொடர்பு எண்களும் பகிரப்பட்டது.

நெகிழ்ச்சி:

இதனையடுத்து அக்தர் தனது சகோதரர்கள் அமர்ஜித் சிங்கை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போதுதான் தான் ஒரு இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர் என்பது அமர்ஜித் சிங்குக்கு தெரிய வந்துள்ளது. பின்னர் இருவரும் சந்திக்க திட்டமிட்டனர்.

இதன்படி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கர்தார்பூரில் உள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்பில் இருவரும் சந்தித்துக்கொண்டனர். சந்திப்பின்போது அக்தரின் தயார் அமர்ஜித் சிங்கின் நினைவு வரும்போதெல்லாம் அழுதுவிடுவார் என்று கூறியுள்ளார். இருவரும் கண்ணீர் மல்க சந்தித்துக்கொண்டது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Previous Story

இம்ரான் கான் உயிருக்கு ஆபத்து : நடுவானில் திக் திக் நொடிகள்!  

Next Story

இலங்கை தொடர்பில் ஐ.நா. பதில் உயர்ஸ்தானிகர், நடா அல்-நஷிப் ஆற்றிய உரை