60 வயதை கடந்தவருக்கு பூஸ்டர் !

S

இந்தியாவில் வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் பூஸ்டர் டோஸ் பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 60 வயதைக் கடந்தவர்களுக்கான வேக்சின் தொடர்பாக முக்கிய உத்தரவை மத்திய சுகாதாரத் துறை பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வேக்சின் பணிகள் தொடங்கப்பட்டன. முதலில் முன்களப் பணியாளர்களுக்கு வேக்சின் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், பின்னர் அது படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டது. இந்தியாவில் முதலில் வேக்சின் பணிகள் மந்தமாக நடைபெற்றாலும் கூட, அதன் பின்னரே கடந்த ஆகஸ்ட் மாதம் வேக்சின் பணிகள் மெல்ல வேகமெடுக்கத் தொடங்கியது.

பூஸ்டர் டோஸ்

இதுவரை இந்தியாவில் 125 கோடி வேக்சின் போடப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக பூஸ்டர் பணிகளைத் தொடங்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வந்தனர். அதன்படி கடந்த சனிக்கிழமை (டிச.25) நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் மோடி, வரும் ஜனவரி 10ஆம் தேதி முதல் முன்னெச்சரிக்கை டோஸ் எனப்படும் 3ஆம் டோஸ் போடப்படும் என அறிவித்தார். அதேபோல 15-18 வயதானவர்களுக்கு வேக்சின் போடப்படும் என அறிவித்தார்.

60 வயதைக் கடந்தவர்கள்

ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதன்படி முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் வேக்சின் போடப்படும் என அறிவிக்கப்பட்டது. அதேபோல 60 வயதைக் கடந்தவர்களுக்கும் இணை நோய் உள்ளவர்களுக்கும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தடுப்பூசி போடப்படும் எனக் கூறப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பாக மத்திய அரசு முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.

தேவையில்லை

அதன்படி 60 வயதைக் கடந்தவர்களுக்கு 3ஆவது டோஸ் போட மருத்துவர்களின் பரிந்துரை தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 60 வயதைக் கடந்தவர்கள் வேக்சின் போடும் முன் தங்கள் மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. அதாவது 60 வயதைக் கடந்தவர்கள் வழக்கம் போல ஜனவரி 10 முதல் கோவின் தளத்தில் பதிவு செய்து கொண்டு பூஸ்டர் டோஸ் எடுத்துக் கொள்ளலாம்.

தேர்தல் ஆணையம்

முன்னதாக கடந்த வாரம் ஓமிக்ரான் அச்சம் காரணமாக உத்தரப் பிரதேச தேர்தலை ஒத்திவைக்க அலகாபாத் ஐகோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதையடுத்து சுகாதாரத் துறை செயலாளர் தேர்தல் ஆணையர் உடன் ஆலோசனையும் நடத்தினார். அதன்படி தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் முன்னுரிமை அளித்து தடுப்பூசி பணிகளை அதிகரிக்குமாறு சுகாதாரத் துறையிடம் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மிக விரைவாக 100% வேக்சின் என்ற இலக்கை அடைய ஏதுவாக வேக்சின் பணிகளை வேகமாக மேற்கொள்ளும்படி சுகாதார அமைச்சகத்தைத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous Story

'தி மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி' நிதி பெற மறுத்த இந்திய

Next Story

நடிகர் வடிவேலு உடல் நிலை!