57 இலட்ச வித்தியாச வெற்றியாம்!

ஐமச. அரசியல்வாதிகள் சஜித் வெற்றி பற்றி சொன்ன முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களைப் பாருங்கள். சஜித் 72 இலட்சம் வாக்குகளையும் அணுர ரணில் மொட்டு ஆகிய மூன்று தரப்பும் தலா 15 இலட்சம் வாக்குகள் விகிதம்தான் பெறுவார்களாம் என்று புட்நோட் சுஜீவ கூறுகின்றார்.

புட்நோட் கருத்தப்படி சஜித் 57 இலட்சம் அதிகப் படியான வாக்குகளினால் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுகின்றார்.! குருனாகல-அசோக்க அபேசிங்ஹ,  நமது தலைவர் 70 இலட்சம் வாக்குகளபை; பெறுவர். இரண்டாம் இடத்திற்கு வரும் அணுர எம்மைவிட 20 இலட்சம் வாக்குகள் குறைவாகப் பெறுவார் என்று குறிப்பிடுகின்றார்.

அப்படியானால் அணுர 50 இலட்சம் வாக்குகளைப் பெறுகின்றார் என்று அசோக்க கணக்கில் தெரிகின்றது.  கபீர் ஹசீம் பேசும் போது நாம் தம்மட்டம் அடிக்கக் கூடாது.

எங்களுக்கு போட்டி இருக்கின்றது என்று நினைத்துக் கொண்டுதான் நாம் வேலை செய்ய வேண்டும் என்று கணக்குச் சொல்வதைத் தவிர்த்துக் கொண்டார்.

Previous Story

மாணவர்கள் விடுத்த கெடு.. 1 மணி நேரத்தில் பதவி விலகிய நீதிபதி!

Next Story

நாடாளுமன்றத்தில் 200 பேர் அவுட்