4-நாட்களில் 11500 விமான சேவைகள் ரத்து

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது.விடுமுறைஇதனால் கடந்த நான்கு நாட்களில் உலகளவில் 11 ஆயிரத்து 500 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் மட்டும் 1,100 விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் பணியாளர்களின் பற்றாக்குறையை சமாளிக்க, கிறிஸ்துமஸ் விடுமுறைக்குச் சென்றவர்களை உடனே திரும்பும்படி பல நிறுவனங்கள் மின்னஞ்சல் அனுப்பியுள்ளன. இதைத் தொடர்ந்து அறிகுறியற்ற கொரோனா பாதிப்பு உள்ளோர் தனிமையில் இருக்கும் காலம் 10 நாட்களில் இருந்து ஐந்து நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. ஒரு சில மருத்துவமனைகள் நோயாளிகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன.


அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ”அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதால் ஒமைக்ரான் குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம்,” என, தெரிவித்துள்ளார். டென்மார்க், ஐஸ்லாந்தை தொடர்ந்து பிரான்சிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், பணியாளர்கள் மூன்று நாட்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி வழங்கியுள்ளது. கிரீஸ் நாட்டில் ஜன., 3 முதல் உணவகம், ‘பார்ஆகியவை நள்ளிரவுக்குப் பின் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஜியான் நகரில் 21 மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டி 2022 பிப்.,ல் நடக்க உள்ளது. கடுமையான கட்டுப்பாடுஇதனால் எல்லையில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. தனிமையில் இருக்கும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜியான் நகர நிர்வாக உத்தரவின்படி, 1.30 கோடி பேர் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்; மக்கள் வாகனங்களில் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Previous Story

இலங்கையில்  பஞ்சம்

Next Story

3546 ஆண்டு: எகிப்தில் திறக்கப்பட்ட மம்மி.. உள்ளே…