3ம் உலகப்போர் !

அரச குடும்ப ரகசிய பாதுகாப்பு சுரங்கங்கள் தயார்!

மூன்றாம் உலக போர் அல்லது ஏதேனும் பயங்கரவாத நிகழ்வுகள் நடந்தால் அவற்றில் இருந்து இங்கிலாந்தின் அரச குடும்பத்தை பாதுகாப்பதற்காக ரகசிய சுரங்க பாதைகளை கொண்ட (panic room) எனப்படும் பாதுகாப்பு அறைகள் தயாராக இருப்பதாக தெரியவந்துள்ளது.

ரஷ்யா உக்ரைன் என இருநாடுகளுக்கு இடையே பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த போர் பதற்றம் மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமேயானால் அவற்றில் இருந்து அரச குடும்பத்தை பாதுகாக்கும் வகையில் பாதுகாப்பு அறைகள் (panic room) தயாராக வைக்கப்பட்டுள்ளன.

இந்த அறைகளை இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் ஆகியோர் தங்களின் குடும்பங்களை போர்கள் மற்றும் பயங்கரவாத தாக்குதலில் இருந்து பாதுகாப்பிற்காக கென்சிங்டன் அரண்மனை வீட்டில் இந்த பாதுகாப்பு அறைகளை(panic room) உருவாக்கியுள்ளனர்.

இந்த பாதுகாப்பு அறைகளில்(panic room) 18 அங்குல தடிமன் கொண்ட தோட்டா எதிர்ப்பு மற்றும் தீ தடுப்பு எஃகு சுவர்களால் ஆனது என்றும் அதன் சுரங்க பாதைகளில் காற்றை வடிகட்டும் அமைப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது.

மேலும் இந்த பாதுகாப்பு அறைகள் பாதுகாப்பான தகவல் தொடர்பு, படுக்கை, சலவை உபகரணங்கள் மற்றும் குறைந்தபட்சம் ஒரு வாரத்திற்கு போதுமான உணவு மற்றும் தண்ணீர் என அடிப்படை வசதிகளையும் அமைத்துள்ளனர்.

இதை போலவே இளவரசர் சார்லஸுக்கும் ஹைக்ரோவ் ஹவுஸில் ஒரு ரகசிய அறை உள்ளது. அது ஒரு ஷிப்பிங் கொள்கலனின் அளவிலான இரும்பு அறை எனவும் வான்வழித் தாக்குதல் முதல் எந்த ஒரு பயங்கரவாதத் தாக்குதலுக்கு இலக்கானாலும் அரச குடும்பத்தினருக்கு எந்தவித உயிர் ஆபத்தும் ஏற்படாத வண்ணம் கட்டமைக்கப்பட்டு இருப்பதாக சில பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய பாதுகாப்பு அறைகள் (panic room) பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத் அவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே கட்டமைக்கப்பட்டு விட்டதாகவும், வின்ட்சர் மற்றும் பக்கிங்ஹாம் என்ற இரண்டு அரண்மனைகளிலும் இந்த பாதுகாப்பு அறைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous Story

ரஷ்யா போட்டுள்ள பக்கா ஸ்கெட்ச்!

Next Story

பிரித்தானியா: குழப்பத்திற்கு மொத்த காரணம் அவர் மனைவி தான்!